பாறைவேதிப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 20:
 
பாறைவேதிப்பொருள்கள் உலகில் சில ஆலைப்பகுதிகளிலேயே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. காட்டாக, சவுதி அரேபியாவின் சுபைல், யான்பு தொழில்சார் நகரங்கள், அமெரிக்காவின் தெக்சாசு, உலூசியானா மாநிலங்கள், தீசைடு என்னும் இங்கிலாந்தின் வடகிழக்குப் பகுதி, நெதர்லாந்தின் இராட்டர்டாம் நகர், இந்தியாவின் குசராத் மாநிலத்தின் சாம்நகர், தாகேசு பகுதிகள், மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களிலே இவை பெரும்பகுதி தயாராகின்றன.
 
எல்லாப் பாறைவேதிப்பொருளும் அவைமட்டுமே ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்படுபவை அல்ல. மாறாக, அடுத்தடுத்த ஆலைகளில் பல்வேறு விதமான வேதிப்பொருள்கள் தயாரிக்கப்படும். செய்திறன் காரணமாகவும், பெரிய அளவில் உற்பத்தி செய்வதன் சிக்கனம் காரணமாகவும், குழாய்கள், சேமிப்புக் கலன்கள், மின்வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொள்ள இயலுமென்பதாலும், இவ்வாறு கூட்டாக ஒரு இடத்தில் பல பாறைவேதிப்பொருள்கள் தயாரிக்கும் வண்ணம் ஆலைகள் அமைக்கப்பட்டிருக்கும். இத்தகு உத்தியை ஒருங்கிணைந்த உற்பத்தி என்றும் வேதிப்பொறியியல் துறையில் வழங்குவர்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பாறைவேதிப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது