பாறைவேதிப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
ஒரு [[பாறைநெய் தூய்விப்பாலை|பாறைநெய் தூய்விப்பாலையில்]] பாறைநெய்யைத் தூய்விப்பதன் வழியாக உருவாக்கப்படும் வேதிப்பொருள்கள் '''பாறைவேதிப்பொருள்கள்''' என்று வழங்கப்படுகின்றன. பிற [[புதைபடிவ எரிபொருள்]]களான [[நிலக்கரி]], [[இயற்கை எரிவளி]] போன்றவற்றில் இருந்தும் வருவிக்கப்படும் சில வேதிப்பொருள்களும் பாறைவேதிப்பொருள்களுள் அடங்கும். சோளம், கரும்பு, பனம்பழம் போன்ற புதுப்பிக்கத் தக்க வளங்களில் இருந்தும் பாறைவேதிப்பொருள்கள் தயாரிக்கலாம். பெரும்பாலும் பாறைநெய்யும் எரிவளியுமே பாறைவேதிப்பொருளுக்கு முதன்மையான மூலங்களாக அமைகின்றன. ஏனெனில், இவை விலைகுறைவாகவும், பரவலாகக் கிடைக்கக்கூடியதாகவும், எளிதாகத் தயாரிப்புக்கு உதவுபவையாகவும் இருக்கின்றன. எல்லாப் பாறைவேதிப்பொருள்களையும் தயாரிக்க, உலகில் பயன்கொள்ளப்படும் பாறைநெய், எரிவளி இவற்றின் ஐந்து விழுக்காடு அளவே போதுமானது.
 
பாறைவேதிப்பொருள்களில் பரவலாய் அறியப்பட்ட இரண்டு பிரிவுகள்: 1) [[எத்திலீன்]], [[புரொப்புலீன்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[ஆல்க்கீன்|ஒலிபீன்கள்]], 2) [[பென்சீன்]], [[தொலுவீன்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[அரோமேட்டிக்கு|அரோமேட்டிக்குகள்]] ஆகியனவாம்.
"https://ta.wikipedia.org/wiki/பாறைவேதிப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது