வைஷ்ணவ தேவி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
திரேதா யுகத்தில், தீமை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியால் பூமி சுமையாக இருந்தபோது,முப்பெரும் தேவியரும் ரேமா ([[லட்சுமி]]), உமா ([[காளி]]) மற்றும் வாணி ([[சரஸ்வதி]]) ஆகிய வடிவம் கொண்டு வைஷ்ணொ தேவியை உருவாக்கினர்.ஒளிப்பிழம்பு வடிவிலான தேவி திரிகூட மலை உச்சியில் உள்ள குகையில் தோன்றினார். பூமிக்கு சுமையாக இருந்த தீமை மற்றும் பேய்களை அழித்தபின், வைஷ்ணொ தேவி பூமியில் வசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார், இதனால் அவள் மனித அவதாரம் எடுக்க முடிவு செய்தாள்.அதன்படி [[இந்தியா]]வின் தெற்கு பாகத்தில் நீண்ட நாட்களாக குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்த ரத்னாகர்சாகர்-சம்ரிதி தேவி தம்பதியர் வீட்டில் அன்னை வைஷ்ணொ தேவி பிறந்தார்.குழந்தைப்பருவத்தில் அன்னை வைஷ்ணொ தேவி, திரிகுடா என அழைக்கப்பெற்றார்.விஷ்ணுவின் தீவிர பக்தரான ரத்னாகர் அவரது குழந்தை பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என நாமம் சூட்டினார். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார். திரிகுடா [[ராமர்]] ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். [[ராமர்]] தமது படைகளுடன் [[சீதை]]யைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது.
திரிகுடா [[ராமர்|ராமரிடம்]] அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். [[ராமர்]] அவரிடம் இந்த அவதாரத்தில் அவர் தமது மனைவியான [[சீதை]]க்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார்.இருந்தாலும் என்றேனும் ஒருநாள் அவரை மணந்து கொள்வதாக வாக்களித்தார்.அதேசமயத்தில் [[ராமர்]] திரிகுடாவிடம் வட [[இந்தியா]]வில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்னை அவர்கள் '[[நவராத்திரி]]'யின் பொழுது [[ராமர்]] [[ராவணன்|ராவணனுக்கு]] எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே [[நவராத்திரி]]யின் ஒன்பது நாட்களில், மக்கள் [[இராமாயணம்|இராமாயணத்தைப்]] படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.ராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக்கொண்ட ராமர் ஒரு முதியவர் ரூபம் கொண்டு திரிகுடா தேவி முன் தோன்றி அவரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். வந்திருப்பது யாரென அறியாத தேவி அவரை நிராகரித்தார். பின்னர் உண்மை உருவில் வெளிவந்த இறைவன் இப்பிறவியில் ஏகபத்தினி விரதம் பூண்டிருப்பதாகவும் [[கலியுகம்|கலியுகத்தில்]] அவர் மீண்டும் [[கல்கி]] அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.மேலும் திரிகுடா மிகவும் புகழ்பெற்ற அன்னை வைஷ்ணொ தேவியாக மாறுவார் மற்றும் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பார் அனைத்து உலகமும் அன்னை வைஷ்ணொ தேவியின் புகழைப்பாடுவார்கள் எனவும் வரமளித்தார். <ref>[http://www.maavaishnodevi.org/mata_vaishno.asp மாதா வைஷ்ணவ தேவி ஜி ]</ref>
 
==பைரவ் நாத் கதை ==
 
காலம் செல்லச்செல்ல, அன்னை தெய்வத்தைப் பற்றிய மேலும் கதைகள் வெளிவந்தன. அது போன்ற ஒரு கதையே ஸ்ரீதரருடையது.
"https://ta.wikipedia.org/wiki/வைஷ்ணவ_தேவி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது