எலும்பு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎காரணங்கள்: == குழந்தை ஊனம் ==
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி விபத்து ஊனங்கள்
வரிசை 9:
== குழந்தை ஊனம் ==
ஒரு குழந்தைப் பிறக்கும் போதே, உடல் ஊனத்துடன் பிறப்பதுண்டு. கருப்பையிலேயே, எலும்புகள் எதுவுமே வளராமல் இருக்கலாம். அல்லது சில எலும்புகள் இல்லாமலோ, குறைந்தோ, சரியான உருவமின்றியோ, மிகையாக வளர்ந்தோ காணலாம். இவற்றால் உடல் வளர்ச்சியிலும், உறுப்புக்களிலும் குறுகல், கோணல் உண்டாகலாம். எலும்பு பருத்தும், முண்டு தட்டியும் ஊனம் ஏற்படலாம். இத்தகு பிறவிநோய்களுக்குத் தகுந்த, உடல் அறுவைச் சிகிச்சைகளால், பிறவி ஊனங்களை முறையாக நீக்கும் தனி மருத்துவப் பிரிவு உள்ளது. இதனை அவயவச்சீரியல் என்பர். போலியோ போன்ற நோய்தாக்கத்தினால் பிறந்த சிலவருடங்களுக்குப் பின் உடல் ஊனம் நிரந்தரமாக ஏற்படுவதுண்டு.
 
== விபத்து ஊனங்கள் ==
விபத்துகளின் காரணமாக உடல் உறுப்புகளில் அடிபட்டதால் உண்டாகும் குருதிக் கட்டிகள், எலும்பு முறிவுகள் போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. குருதிக் கட்டிகள், சாதாரணமாகத் தோலுக்கு அடியில் ஏற்படும். மூடியுள்ள கால், கை, எலும்புகளில் அதிகம் ஏற்படுகிறது. இவற்றிற்கு ஓய்வு கொடுத்துக் குளிர்ச்சியான மருந்துகளையும், அழுத்தங்களையும் தரலாம். உள்ளுக்கு அயோடைடுகள் கொடுப்பர். எலும்பு முரிதல் அல்லது உடைதல் பல காரணங்களால், பல வகைகளில் உண்டாகிறது. அடிபட்ட இடத்திலாவது, அல்லது மற்றோரிடத்திலாவது முரிவு நேரிடலாம். தசைகளின் வேகத்தாலும் எலும்பு உடையலாம். நோய்களால் ஏற்கெனவே நொந்து போன எலும்புகள் தாமாகவோ அல்லது வெகு சிறிய தாக்குதலாலோ உடையலாம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எலும்பு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது