கிராவிடான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"குவாண்டம் ஈர்ப்பியல் கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:52, 6 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

குவாண்டம் ஈர்ப்பியல் கோட்பாடுகளின் படி, கிராவிடான் என்பது ஈர்ப்பு விசையின் ஒரு கருதுகோள் அளவிலான குவாண்டம், அதாவது ஈர்ப்பியல் விசையைச் செயலாக்கச் செய்யும் ஒரு அடிப்படைத் துகள் ஆகும். பொது சார்புக் கோட்பாட்டில் மறுஇயல்பாக்கலுடன் நிலுவையிலுள்ள கணிதச் சிக்கல்களின் காரணமாக கிராவிடான்களுக்கு முழுமையான குவாண்டம் புலக்கோட்பாடு இல்லை. குவாண்டம் ஈர்ப்பியலின் ஒத்தக் கோட்பாடாக நம்பப்படும் சரக் கோட்பாட்டின் படி, கிராவிடான் என்பது ஒரு அடிப்படைச் சரத்தின் நிறையற்ற நிலை ஆகும்.

கிராவிடான் என்ற துகள் உண்மையில் இருந்தால், அது நிறையற்றதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் ஈர்ப்பியல் விசை என்பது நீண்ட வீச்சினைக் கொண்டது மேலும் ஒளியில் வேகத்தில் பரவுதுபோல் தெரிகிறது. கிராவிடான் ஒரு சுழற்சி-2 போசான் ஆக இருக்க வேண்டும் ஏனெனில் ஈர்ப்பு விசையின் மூலம் ஒரு அழுத்தம் - ஆற்றல் பண்புரு, அதாவது இரண்டாம் நிலை பண்புரு ஆகும் (மின்காந்தவியல் சுழற்சி -1 ஒளியணு உடன் ஒப்பிடும்போது, இதன் மூலம் நான்-மின்னோட்டம் ஆகும்). கூடுதலாக, எந்தவொரு நிறையற்ற சுழற்சி-2 புலமும் கிராவிடானிலிருந்து பிரித்தறிய முடியாத விசையைத் தூண்டும் என்பதைக் காட்ட முடியும், ஏனெனில் ஒரு நிறையற்ற சுழற்சி-2 புலம் தகைவு-ஆற்றல் பண்புருவுடன் ஈர்ப்பியல் இடைவினைகளைப் போன்றே இணைகிறது. இந்த முடிவுகள், ஒரு நிறையற்ற சுழற்சி-2 துகள் கண்டறியப்பட்டால், அது கிராவிடானகத் தான் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன.[1]

  1. For a comparison of the geometric derivation and the (non-geometric) spin-2 field derivation of general relativity, refer to box 18.1 (and also 17.2.5) of Charles W. Misner; Kip Thorne; John A. Wheeler (1973). Gravitation. W. H. Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7167-0344-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராவிடான்&oldid=2889266" இலிருந்து மீள்விக்கப்பட்டது