எந்திரப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி Mercedes V6 DTMபடம்
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி உராய்வு
வரிசை 4:
ஓர் எந்திரத்தில் பயன்படும் பிணைப்புக்களை, [[வடிவவியல்|வடிவ கணித]] முறைப்படி ஆராய்ந்து, எளிய எந்திரத்தின் அமைப்பை அறியலாம். ஓர் எந்திரத்தின் உறுப்புக்களில் இரண்டு தொட்டவாறு இருந்தால், அவற்றை ஓர் இயக்கவியல் இணையுறுப்பு (Kinematic pair) எனலாம்; இது ஒரு பரப்பில் தொட்டவாறு இருந்தால், அவை தாழ்ந்த இணையுறுப்பு எனவும், ஒரு வரையில் தொட்டவாறிருந்தால் உயர்ந்த இணையுறுப்பு என்பர். [[பிணைப்பு வலிமை|பிணைப்பு]]க்களின் எண்ணிக்கைக்கும், இணையுறுப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையே, ஓர் இயற்கணிதத் தொடர்பைப் பெறலாம். இதைப் போலவே, பிணைப்புக்களுக்கும், இணைப்புக்களுக்கும் உள்ள தொடர்பையும் பெறலாம். ஓர் உயர்ந்த இணையுறுப்புப் பதிலாக, இரு தாழ்ந்த இணையுறுப்புகளையும், மேலுமொரு பிணைப்பையும் எந்திரத்தில் பயன்படுத்தலாம்
 
== உராய்வு ==
ஒரு பிணைப்பின் வேகத்தையும், வேக வளர்ச்சியையும் அறியலாம். ஒரு பிணைப்பின் வேகப்படம் பிணைப்பின் வடிவத்தையே ஒத்திருக்கும். ஆனால், பிணைப்பின் வடிவத்தை வேகத்தின் திசையில் 90 திருப்பி, அதன் வேக பிம்பத்தைப் பெறலாம். வேகவளர்ச்சியும், இதையே ஒத்திருக்கும். ஆனால், அது 90 க்கும் அதிகமான கோணத்தில் திருப்பிப் பெறப்படும். இயக்கம் எந்திரங்களின் சிறப்பியல்பாகும். இயக்கம் உள்ள இடத்தில் உராய்வும், இருக்குமாதலால் எந்திரங்களைப் பற்றிய கொள்கைக்கு [[உராய்வு]] முக்கியமானதாகும்.. உராய்வினால் தொல்லை விளையும்போது, அதைக் குறைக்க முயல்கிறார்கள். [[விசைப்பொறி]]யின் இறுக்குத் தடையைப் போன்ற உறுப்பில் உராய்வு தேவையாகும் போது, குறைவான இடத்தில் அதிகமான உராய்வைப் பெற முயல்வார்கள். உயவிடும்போது உராய்வு குறைவதால் அதுவும் முக்கியமானது.
 
== போக்குமாற்றி ==
முன்னரே தீர்மானிக்கப்பட்ட பலவகை [[இயக்கம் (இயற்பியல்)|இயக்கங்களைப்]] பெறப் போக்குமாற்றிகள் (Cams) பயன்படுகின்றன. ஓர் எஞ்சின் உருளைக்குள் நுழையும் காற்றை அனுமதிக்கும் வால்வுகளும், கழிவு வாயுக்களை வெளியேற்றும் வால்வுகளும், போக்குமாற்றிகளால் இயங்குகின்றன. தானாக இயங்கும் கடைச்சல் எந்திரம், எல்லாவகைகளிலும் இயங்க, அதிலுள்ள உருளைப் போக்குமாற்றி உதவுகிறது. இதன் உதவியால் நிலையான வேகத்தையும், நிலையான வேகவளர்ச்சியையும், சுத்த ஹார்மானிக் இயக்கம் போன்ற பல்வேறு இயக்கங்களையும் பெறலாம். இயக்கத்தைத் தடை செய்ய பிரேக்குப் பயன்படுகிறது. அகத்தே விரிந்து தடுக்கும் பிரேக்கு மோட்டார் வண்டியில் பயன்படுகிறது. தோற்றுவிக்கப்படும் திறனை அளவிட [[விசைமானி]] (Dynamometer) பயன்படுகிறது. இது சக்தியை முற்றிலும் ஏற்றோ அல்லது கடத்தியோ அதை அளவிடும் திறன் பெற்றுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/எந்திரப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது