அத்திலாந்திக் கடற்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி விக்கி உள்ளிணைப்பு
வரிசை 19:
| range_map_caption = இனப்பெருக்க எல்லை (நீலம்), கோடைப் பரம்பலின் தெற்கு எல்லை (கறுப்பு), குளிர்காலப் பரம்பலின் தெற்கு எல்லை (சிவப்பு)
}}
'''அத்திலாந்திக் கடற்கிளி''' (Atlantic puffin) என்பது, "[[ஆக் (பறவை)|ஆக்]]" குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை இனமாகும். [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலைத்]] தாயகமாகக் கொண்ட ஒரே கடற்கிளி இதுவாகும். இவற்றுக்கு உறவான இரண்டு இனங்களான கொண்டைக் கடற்கிளி, கொம்புக் கடற்கிளி ஆகியவை வடகிழக்கு பசிபிக் பகுதியில் காணப்படுகின்றன. அத்திலாந்திக் கடற்கிளிகள் [[ஐஸ்லாந்து]], [[நார்வே]], [[கிரீன்லாந்து]], [[நியூபவுண்ட்லாந்து (தீவு)|நியூபவுண்ட்லாந்து]], ஆகியவற்றுடன் பல வட அத்திலாந்திக் தீவுகளிலும்; தெற்கே மைன், [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] மேற்குக் கடற்கரைப் பகுதிகள், கிழக்கில் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] சில பகுதிகள் ஆகிய இடங்களிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பெரும் எண்ணிக்கையிலும், பரந்த பரப்பளவிலும் காணப்பட்டாலும், இவை காணப்படும் எல்லைக்குட்பட்ட சில பகுதிகளிலாவது மிக விரைவாகக் குறைந்து வந்துள்ளன. இதனால், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இவ்வினத்தை அழிவதற்கான வாய்ப்புக்கொண்ட இனமாக அறிவித்துள்ளது. நிலத்தில் நிமிர்ந்த நிலையில் நிற்கக்கூடியது. கடலில், மேற்பரப்பில் நீந்தக்கூடியது. வாலை உந்துவதற்காகப் பயன்படுத்துவதன் மூலம் நீருக்குள் மூழ்கிச் சிறிய மீன்களைப் பிடித்து இது உண்கின்றது.
 
இக்கடற்கிளியின் உச்சியும், முதுகும் கறுப்பு நிறமாகவும்; கன்னப் பகுதி வெளிறிய சாம்பல் நிறமாகவும், அடிப்பக்கம் வெள்ளையாகவும் காணப்படுகிறது. இதன் அகன்ற பிரகாசமான சிவப்பு, கறுப்பு அலகும்; செம்மஞ்சள் கால்களும் இதன் இறகுத் தொகுதியில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. குளிர் காலத்தில் இது கடலில் இருக்கும்போது, இறகை உதிர்க்கின்றது. இதன்போது இது கடுமையான நிறம் கொண்ட முக அம்சங்கள் சிலவற்றை இழக்கின்றன. வசந்த காலத்தில் இழந்த நிறங்கள் மீண்டும் கிடைக்கின்றன. ஆண் பறவை சற்றுப் பெரிதாக இருந்தாலும், வெளித் தோற்றத்தில் பெருமளவு ஆண், பெண் பறவைகள் ஒத்தவையாகக் காணப்படுகின்றன. இளம் பறவைகளின் இறகுத் தொகுதியும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருப்பினும், அவற்றின் கன்னங்கள் கடும் சாம்பல் நிறமானவை. இளம் பறவைகளுக்கு பிரகாசமான நிறங்கொண்ட தலை அலங்காரம் இல்லை. இவற்றின் அலகு ஒடுங்கியதாகவும், நுனியில் மஞ்சள் கலந்த கறுப்பு நிறம் கொண்ட கடும் சாம்பல் நிறமாகவும் காணப்படுகின்றது. வடக்குப் பகுதியின் கடற்கிளிகள் தென் பகுதிக் கடற்கிளிகளைவிட அளவிற் பெரியவை. இவை இரண்டும் வெவ்வேறு துணை இனங்களைச் சேர்ந்தவை எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அத்திலாந்திக்_கடற்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது