சனவரி 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
{{நாள்|January 1}}
==வரலாறு==
[[ஐரோப்பா]]வில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலப்]] பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர் 25 ([[இயேசுவின் பிறப்பு]]), மார்ச் 1, மார்ச் 25 ([[இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு]]), அல்லது [[உயிர்ப்பு ஞாயிறு]] போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன. மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்டம்பர் 1 ஆம்முதல் நாளை ஆண்டின் ஆரம்பதொடக்க நாளாகத் தேர்ந்தெடுத்தன.
 
[[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]], சனவரி 1 புத்தாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது, ஆனால் 12-ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச் 25 இல் ஆண்டுத் துவக்கமாக இருந்தது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் [[கிரெகொரியின் நாட்காட்டி]]யைப் பின்பற்றுவதற்கு முன்னரேயே சனவரி 1 ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடின. எடுத்துக்காட்டாக, [[இசுக்கொட்லாந்து]] 1600 இல் சனவரி 1 ஐ புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் [[நாட்காட்டிச் சட்டம், 1750]] இன் படி, 1752 இல் புத்தாண்டை சனவரி 1 இற்கு மாற்றின. அதே ஆண்டின் செப்டம்பரில், பிரித்தானியா, மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் [[கிரெகொரியின் நாட்காட்டி]] அறிமுகமானது.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது