கிரேட்டா தூன்பர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
இணைப்பிற்கான உரிய தலைப்பு தரப்பட்டது
வரிசை 22:
 
==எதிர்காலத்துக்காக வெள்ளி==
2018இல், தன்னுடைய 15ஆம் வயதில் (பி.3 ஜனவரி 2003) ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஒரு சிறிய பதாகையுடன் போராட்டத்தைத் தொடங்கிய கிரேட்டா தன்பர்க் அதனைத் தொடர்கிறார். சுற்றுச்சூழல் தொடர்பான அப்பிரச்னையை முன்னெடுத்தபோது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னாள்களில் வெள்ளிக்கிழமைதோறும் தன் பள்ளி வகுப்பினைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்த ஆரம்பித்தார். இதையடுத்து, ‘எதிர்காலத்துக்காக வெள்ளி' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். (#fridaysforfuture) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமாக்கினார். இதன் மூலம் உலக மக்களின் கவனம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து பல நகரங்களுக்கும் சென்று பொதுமக்களையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களையும் சந்தித்து பருவ நிலை தொடர்பான விழிப்புணர்வினைத் தொடர்ந்து மேற்கொள்ள ஆரம்பித்தார்.<ref>[https://www.fridaysforfuture.org/ Fridays For Future]</ref> இயற்கையைக் காக்க தன்னுடைய பள்ளிப்படிப்பைத் துறந்த தன்பர்க், தன் கோரிக்கையின் மூலமாக மிகவும் பிரபலமாகி வருகிறார்.<ref>[https://www.vikatan.com/news/international/152651-greta-thunberg-nominated-for-nobel-peace-prize இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி, விகடன், 18 மார்ச் 2019]</ref> கார்டியன் இதழுக்கு 11 மார்ச் 2019இல் அளித்த பேட்டியில், “நான் சற்று அதிகமாக நினைக்கிறேன். சிலர் அப்படியே விட்டுவிடுவர். எனக்கு வருத்தம் தருவதையோ, சோகம் தருவதையோ அப்படியே விட்டுவிட முடியவில்லை. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் சிறியவளாக இருக்கும்போது எங்களுடைய ஆசிரியர்கள் எங்களிடம் திரைப்படங்களைப் போட்டுக் காண்பிப்பர். அப்போது கடலில் பிளாஸ்டிக் மிதப்பதையோ, பசியோடு இருக்கின்ற போலார் கரடிகளையோ பார்க்கும்போது முழுதும் அழுதுகொண்டேயிருப்பேன். என் நண்பர்களோ படத்தைப் பார்க்கும்போது மட்டுமே வருத்தப்படுவர், படம் முடிந்ததும் மற்றவற்றைப் பற்றி நினைக்க ஆரம்பிப்பர். என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அந்தப் படங்கள் அனைத்தும் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.” <ref>[https://www.theguardian.com/world/2019/mar/11/greta-thunberg-schoolgirl-climate-change-warrior-some-people-can-let-things-go-i-cant Greta Thunberg, schoolgirl climate change warrior: ‘Some people can let things go. I can’t’, Guardian, 11 March 2019]</ref>
 
==டெட் மாநாடு==
"https://ta.wikipedia.org/wiki/கிரேட்டா_தூன்பர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது