காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

390 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
மேற்கோள் பத்தி இணைப்பு
(25 டிசம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு)
(மேற்கோள் பத்தி இணைப்பு)
பிரதான ஆலயத்தைச் சுற்றிப் பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. சிறு ஆலயங்கள் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி இரங்க பதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். ஆலயத்தின் வெளி மதில்களில் சிவபெருமானின் பல்வகை வடிவங்களைக் காட்டும் அழகிய சிற்பங்கள் உள்ளன. அவை தக்ஶிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், ஹரிகரர் முதலிய திருவுருவங்கள் ஆகும். உமையன்னை, முருகப்பிரான், திருமால் ஆகிய தெய்வங்களின் எழில் சிற்பங்களும் இங்கு உள்ளன. துணை ஆலயங்களிலும் பல அழகிய தெய்வத்திருவுருவங்கள் உள்ளன. இக்கோவிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. இங்குக் காணப்படும் சிவபெருமானது திருவுருவங்கள் சமயச் சிறப்பும் கலைச் சிறப்பும் மிக்கவையாகும். கைலாசநாதர் ஆலயத்தில் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள சிவபெருமானது பல்வேறு வடிவங்களை அழகிய சிற்பங்களாகப் பல்லவ சிற்பிகளின் உளிகள் வடித்துள்ளதைக் காணலாம்.
 
=== புனர் ஜனனி ===
=== பிறப்பு முதல் இறப்பு வரை ===
கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது. அதன் உள் மற்றும் வெளி வாயில்கள் குறுகலாக இருந்து தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று மீளும்போது புனர்ஜென்மம் எடுத்த நினைவு மேலோங்கி நிற்கும். இதனைச் சுற்றி வந்தால் மறு பிறவி இல்லை என்று பொருளாகும். <ref name=dinamalar> [https://temple.dinamalar.com/New.php?id=1712 அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்] </ref>
பிறப்பு முதல் இறப்பு வரை என்பது கோவிலின் கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தை சுற்றிவரும் செயலாகும். மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவிலில் பிரகாரத்தை சுற்றும் வழிக்கு சிறிய சதுர துவாரம் மட்டுமே விடப்பட்டுள்ளது. அது போல் பிரகாரத்தை விட்டு வெளிவரவும் சிறு சதுர துவாரம் மட்டுமே உள்ளது. இது அன்னையின் கருவறையில் இருந்து குழந்தை வருவது போன்ற செயலைக் குறிப்பதாகும். மேலும் வெளி வரும் துவாரம் மிகச்சிறியதாக இருப்பதால், வெளியே வர அதற்கு மேலே படிக்கட்டுடன் கூடிய பெரிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.
 
=== பல்லவர் கால ஓவியங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2900229" இருந்து மீள்விக்கப்பட்டது