காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் பத்தி இணைப்பு
மேற்கோளுடன் கூடுதல் செய்தி இணைப்பு
வரிசை 35:
 
== சிறப்பு ==
காஞ்சிபுரம் நகரத்தின் மேல் கோடியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை நெருங்கும்போது ஒரு அழகிய கந்தர்வ விமானம் தரையில் இறங்கி நிற்கிறதோ என்ற பிரமிப்பினை உணர முடியும். <ref name=dinamalar/> இங்கே அமைந்துள்ள பல காலகட்டங்களையும் சேர்ந்த [[இந்துக் கோயில்|கோயில்களில்]] இதுவும் ஒன்றாகும். '''தென்திசைக் கைலாயம்''' என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் தமிழ் கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்பு முனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இது காஞ்சிபுரத்திலுள்ள மிக்க பழைமைமிக்க சிவன் கோவிலாகும்.
இதைக் கல்வெட்டுக்கள் ’இராஜசிம்மேச்சரம்’ எனக் கூறுகின்றன. இக்கோவிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து வருகிறது. இக்கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டதாகும்.
 
வரிசை 43:
தமிழ் நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய [[கட்டிடம்|கட்டிடங்களாகக்]] கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது [[பல்லவர்]]கள் ஆவர். தொடக்கத்தில் [[குடைவரை]]களையும், பின்னர் [[ஒற்றைக் கற்றளி]]களையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து [[கட்டுமானக் கோயில்]]களை அமைப்பதிலும் முன்னோடிகளாக அமைந்தார்கள். இவற்றில் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட கட்டுமானக் கோயில்கள் கட்டும் [[தொழில் நுட்பம்]], தமிழ் நாட்டில், பல்லவ மன்னனான [[இராஜசிம்ம பல்லவன்|இராஜசிம்மனால்]] கட்டப்பட்ட [[மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்|மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில்]] முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்டது தான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்.
 
தான் மட்டுமன்றி தன் மகனையும், தன் மனைவியையும்கூட இந்த கட்டடப்பணியில் இராஜசிம்மன் ஈடுபடுத்தியுள்ளார். <ref name=dinamalar> காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டதெனினும் இவனது மகனான [[மூன்றாம் மகேந்திரவர்ம பல்லவன்|மூன்றாம் மகேந்திரவர்மனே]] கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.
 
இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (கி.பி.740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் பட்டகடலுக்குக் (கர்நாடகா) கொண்டு சென்றார். அங்கு அரசி லோகமாதேவியின்
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_கைலாசநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது