தெலுங்கு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
 
== தோற்றம் ==
தெலுங்கு [[திராவிட மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. மற்ற திராவிட மொழிகளைப் போலவே தெலுங்கு மொழி [[சமஸ்கிருதம்|சமசுகிருதத்தில்]] இருந்து தோன்றவில்லை. இந்தியாவில் [[ஆரியமொழி]] நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் திராவிடதமிழ் மொழி பேசப்பட்டு வந்தது. முழுவதுமாக நிறுவப்படாது இருப்பினும், சிந்து சமவெளி நாகரீகம் திராவிடதமிழ் மொழி நாகரீகமாக இருப்பதற்கு அதிக அடிப்படை வாய்ப்புகள் உள்ளன.
 
தெலுங்கு பழந்திராவிடதமிழ் மொழியில் இருந்து தோன்றிய ஒரு மொழி. இது தக்காண உயர்பீட நிலப்பகுதியில் உள்ள மக்கள் பேசும் தென்-நடு திராவிட மொழித் துணைக்குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தைச் சார்ந்த மற்ற மொழிகள் [[கொண்டி]], [[கூய்]], [[குவி]] போன்ற தெலுங்குடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய மொழிகள் ஆகும். இந்தியாவில் மிக அதிகளவில் பேசப்படும் திராவிட மொழி தெலுங்கே.
 
தெலுங்கு மற்ற மொழிகளின் சொற்களை மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளும். சமசுகிருத மொழி தெலுங்கு இலக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தியது போல், வேறெந்த மொழியும் தாக்கம் ஏற்படுத்தியதில்லை என்று கூறுவர் (இதேக் கருத்தை வங்காளி, மராத்தி மொழியாளர்களும் கூறுவர்). தெலுங்கு மொழியில் பல எழுத்துக்கள் முக்கியமாக ஹகரம் கலந்த எழுத்துக்கள் சமசுகிருத மொழிக்காகவே நெடுங்கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சமசுகிருத்தின் தாக்கம் அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ளது தான். உருது மொழி மற்றும் ஆங்கில மொழி சொற்களைக்கூட தெலுங்கு மொழி ஏற்றுக்கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது