கு. மா. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
1920 இல் [[திருவாரூர்]] அருகேயுள்ள வேளூக்குடியில் மாரிமுத்து, கோவிந்தம்மாள் உணையருக்கு மகனாகப் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார். இவரது தாயார் [[தேவாரம்]], [[திருவாசகம்]], பக்திப் பனுவல்களை இசைக்கக்கூடியவராக இருந்தார். தாயைப் போல பிள்ளை என்பதற்கேற்ப தாய் பாடிய பாடல்கள்தான் தனது தமிழார்வத்தையும், இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். வறுமையின் காரணமாக இவரது தாயாரால் ஆறாம் வகுப்புக்குமேல் படிக்க வைக்க இயலவில்லை. இதன்பிறகு வேளாண் தொழிலாளராகவும், மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை, துணிக்கடை போன்றவற்றில் வலேவேலே செய்தார். பொட்டலம் மடிக்கும் வேலையின்போது ஓய்வு நேரத்தில் பழைய புத்தகங்களை படித்துவந்தார். இதனால் எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு சிறுகதைகளை எழுதத் துவங்கினார். எழுத்தாளர்கள் [[கா. மு. ஷெரீப்]], மேதாவி என்னும் கோ. த. சண்முகசுந்தரம் ஆகியோர் இவரின் சொந்த ஊரைச் சேர்ந்த இளமைக்கால நன்பர்கள். இவர் ஜெயலக்ஷ்மித் 1947 ல் திருமணம் செய்து, ஐந்து ஆண் மக்களையும், இரண்டு பெண் மக்களையும் பெற்றார். இவரது இளைய மகன் [[கு. மா. பா. கபிலன்]] ஆவார்.
== பத்திரிகையாளராக ==
[[சி. பா. ஆதித்தனார்]] மதுரையில் இருந்து வெளியிட்ட தமிழன் இதழின் துணை ஆசிரியராக இணைந்தார். பின்னர் கோவையில் திருமகள் இதழில் பணியாற்றினார். 1945 இல் கோழும்பில் இருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக இணைந்தார். இந்திய விடுதலைக்குப்பிறகு நாடு திரும்பியவர் தமிழன் குரல் என்ற மாதம் இருமுறை இதழை நடத்தி இழப்பை சந்தித்ததால் அதனை விற்றுவிட்டு, சென்னை வந்து ம.பொ.சியின் தமிழ் முரசு இதழில் நுணை ஆசிரியராக இணைந்தார். அக்காலக்கட்டத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் தமிழாசிரியராக இருந்த திருவேங்கடம் என்பவர் இவரின் எழுத்தாற்றலைக் கண்டு இவருக்கு மரபுக்கவிதைகளை எழுத கற்றுக்கொடுத்தார். இதன் பிறகு 1949 ஆம் ஆண்டில் பாரதிதாசன் தலைமையில் கோவையில் நடந்த கவியரங்கில் தன் 28 ஆம் வயதில் கலந்துகொண்டார்.
 
== அரசியிலில் ==
சிலம்புச்செல்வர் [[ம.பொ.சி.]]யின் [[தமிழரசுக் கழகம்|தமிழரசுக் கழகத்தில்]] அரசியல் பணியாற்றியவர். அக்கழகத்தின் பொதுச்செயலாலராகவும் கடமையாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். [[பாரதிதாசன்]] மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.
 
==எழுதிய சில திரைப்படப் பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கு._மா._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது