அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 123:
 
== சமூகப்பணிகள் ==
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு]] எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் [[பொருளாதாரம்|பொருளாதாரத்திலும்]] ஒடுக்கப்பட்டவர்கள் கையில் [[உயர் வர்க்கம்|அதிகாரம்]] கிடைக்க வேண்டும் என்று போராடினார். [[1930]]-ல் [[இலண்டன்|லண்டனில்]] நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் [[மக்கள்|மக்களுக்கு]] என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் [[எதிர்ப்புப் போராட்டம்|போராடுவேன்]]. அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது [[இந்திய வட்டமேசை மாநாடுகள்|வட்டமேசை மாநாட்டில்]] வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. [[தலித்|தாழ்த்தப்பட்டோருக்குத்]] தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு [[தமிழக சட்டமன்றத் தொகுதிகள்|தொகுதியில்]] பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் '[[இந்தியத் தேர்தல்கள்|இரட்டை வாக்குரிமை]]" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்திஜி]] இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி [[உண்ணாநிலைப் போராட்டம்|உண்ணாவிரதப் போராட்டத்தைத்]] தொடங்கினார். இதன் விளைவாக [[செப்டம்பர் 24]] - [[1931|1932]]-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய [[சாதி|சாதிய]] அமைப்பையும், [[தீண்டாமை|தீண்டாமைக்]] கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் [[1956]]-ல் தமது ஆதரவாளர்களுடன் [[பௌத்தம்|புத்த மதத்தில்]] இணைந்தார்.
 
[[இந்தியாவின் விடுதலை நாள்|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியல்]] சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் [[இந்தியச் சட்டம்|இந்திய அரசியல் சட்டம்]] இயற்றப்பட்டது, அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு [[இந்திய நாடாளுமன்றம்|பாராளுமன்றத்தில்]] சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.( [[1952]] பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] அதிக இடங்கள் பெற்றமையினால் [[1952]] ல் அந்த சட்டம் நிறைவேறியது) சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் [[1956]] - [[டிசம்பர் 6]]-ல் காலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது