இரமண மகரிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 21:
|footnotes =
}}
'''இரமணாஇரமண மகரிசி''' (''Ramana Maharshi'') (ஒலிப்பு: ''ரமணஇரமண மஹரிஷி'') ([[டிசம்பர் 30]], [[1879]] - [[ஏப்ரல் 14]], [[1950]]) [[தமிழ் நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். [[அத்வைதம்|அத்வைத வேதாந்த]] நெறியை போதித்த இவர் [[திருவண்ணாமலை]]யில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ''[[ஸ்ரீ ரமண ஆசிரமம்|ரமண ஆசிரமம்]]'', உலகப் புகழ் பெற்றதாகும்.
 
== இளமைக்காலம் ==
வரிசை 29:
 
== ஆன்மீக நாட்டம் ==
ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் [[பெரியபுராணம்]] போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மீனாட்சி அம்மன்]] கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.
 
இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”இரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அதுவரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/இரமண_மகரிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது