பிரெக்சிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிரெக்சிட்டு |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''பிரெக்சிட்டு''' (''Brexit'')<ref>{{cite web|last1=Hall|first1=Damien|title='Breksit' or 'bregzit'? The question that divides a nation|url=https://theconversation.com/breksit-or-bregzit-the-question-that-divides-a-nation-82278|date=11 August 2017|website=The Conversation|language=en}}</ref> என்பது ''பிரிட்டிசு'', "British", மற்றும் "exit" ஆகியவற்றின் இருபாதி ஒட்டுசொல்லாகும். இது [[ஐக்கிய இராச்சியம்]] [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இருந்து வெளியேறுவதைக் குறிக்கும் பரப்புரைச் சொல்லாகும். ஐக்கிய இராச்சியத்தில் சூன் 2016 இல் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 52% பிரித்தானியர் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரித்தானிய அரசு 2017 மார்ச்சில் வெளியேற்றத்தை முறைப்படி அறிவித்து, அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து 2020 சனவரி 31 பிப 11:00 [[கிரீன்விச் இடைநிலை நேரம்|மணிக்கு]] ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேற ஆரம்பித்தது. முழுமையான வெளியேற்றம் 2020 திசம்பர் 31 இல் நிறைவேறும் எனக் காலக்கெடுவை பிரித்தானிய அரசு அறிவித்தது.<ref name=Bennett>{{Cite news|title=How will the Brexit transition period work?|url=https://www.telegraph.co.uk/politics/0/brexit-2020-transition-period/|newspaper=Telegraph|date=27 January 2020|author=Asa Bennett}}</ref> 11-மாத இடைக்கலப் பகுதியில் ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் தமது எதிர்கால உறவு பற்றிய பேச்சுவார்த்தைகளில்
பிரெக்சிட் பரப்புரை யூரோ ஐயுறவுக் கொள்கையாளர்களால் மேற்கொள்ளபட்டது. ஐரோப்பிய சார்பானவர்கள் விலகலை எதிர்த்து வந்தனர். ஐக்கிய இராச்சியம் 1973 ஆம் ஆண்டில் ஐரோப்பிய சமூகத்தில் (முக்கியமாக ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில்) இணைந்தது. 1975 ஆம் ஆன்டில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 1970களிலும், 1980களிலும் ஐரோப்பிய சமூகத்தில் இருந்து விலகுவதற்கான பரப்புரைகள் முக்கியமாக இடதுசாரி அரசியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. [[தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|தொழிற் கட்சி]]யின் 1983 தேர்தல் அறிக்கையில் இதற்கு ஆதரவாகக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. 1992 [[மாஸ்ட்ரிக்ட்]] ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் உருவானது, ஆனாலும் அது அப்போது பொது வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. [[கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|பழமைவாதக் கட்சி]]யின் யூரோ ஐயுறவுக் கொள்கையாளர்கள் இவ்வொப்பந்தத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இது அன்றைய பழமைவாதப் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரதமர்]] [[டேவிட் கேமரன்|டேவிட் கேமரனிற்கு]] பொது வாக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. 2016 சூன் மாதத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்திருக்க கேமரன் பரப்புரை நடத்தினார். ஆனாலும், வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் விலக ஆதரித்ததை அடுத்து கேமரன் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பிரெக்சிட்டுக்கு ஆதரவான [[தெரசா மே]] புதிய பிரதமரானார்.
|