யூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 254:
 
வினைக் கரைசலை படி நிலைகளில் (முதலில் 18-25 மில்லிமீட்டர் பாதரச அழுத்தத்திலிருந்து பின்னர் 2–5 மில்லிமீட்டர் பாதரச அழுத்தம் வரை) குறைத்து ஒவ்வொரு கட்டத்திலும் நீராவி-சூடான கார்பமேட்டு சிதைமாற்றி வழியாக செலுத்துவதவதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக கிடைக்கும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் அம்மோனியாவை வீழ்ச்சி-பட கார்பமேட்டு மின்தேக்கியில் மீண்டும் மீளிணைப்பு செய்து கார்பமேட் கரைசலில் முந்தைய நிலைக்குள் செலுத்துகிறது.
 
=== அகற்றல் கோட்பாடு ===
 
ஒட்டு மொத்த மறுசுழற்சி கோட்பாடு இரண்டு முக்கிய குறைபாடுகளைக் கொண்டுள்ளது. சிக்கலான வினையின் போக்கும், இதன் விளைவாக, தேவைப்படும் செயல்முறை உபகரணங்களின் அளவும் முதலாவது குறைபாடாகும். இரண்டாவது குறைபாடு கார்பமேட்டு கரைசலில் மறுசுழற்சி செய்யப்படும் நீரின் அளவுடன் தொடர்புடையது ஆகும். யூரியா மாற்று வினையில் வேதிச்சமநிலையின் மீது இது மோசமான விளைவைக் கொண்டிருக்கிறது, இதனால் ஒட்டுமொத்த தாவர செயல்திறனிலும் பாதிப்பு உண்டாகிறது. 1960 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் நெதர்லாந்தில் சிடாமிகார்பன் என்பவர் உருவாக்கிய அகற்றும் கோட்பாடு இரு பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்தது. வெப்ப மீட்பையும் மறுபயன்பாட்டையும் இக்கோட்பாடு அணுகுமுறை மேம்படுத்தியது.
 
கார்பமேட்டு உருவாக்கம் / சிதைவு ஆகியவற்றில் இருக்கும் வேதிச்சமநிலையின் நிலை வினைபடு பொருள்களின் பகுதி அழுத்தங்களால் உற்பத்தியாகும் விளைபொருளைப் பொறுத்ததாகும். மொத்த மறுசுழற்சி செயல்முறைகளில், ஒட்டுமொத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் கார்பமேட்டு சிதைவு வினை ஊக்குவிக்கப்படுகிறது, அமோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடு இரண்டின் பகுதி அழுத்தத்தை இது குறைக்கிறது. வினைபடு பொருள்களில் ஒன்றின் பகுதி அழுத்தத்தை கட்டுபடுத்துவதன் மூலமும் ஒட்டுமொத்த அழுத்தத்தைக் குறைக்காமல் இதேபோன்ற விளைவை அடைய முடியும். மொத்த மறுசுழற்சி செயல்முறையில் நேரடியாக கார்பன் டை ஆக்சைடு வாயுவை அமோனியாவுடன் சேர்த்து உலைக்குள் அனுப்புவது போல இல்லாமல், அதற்குப்பதிலாக அகற்றல் கோட்பாட்டுச் செயல்முறையில் கார்பன் டை ஆக்சைடு முதலில் ஒரு கார்பமேட்டு சிதைப்பியின் வழியாகச் செலுத்தப்படுகிறது. இக்கார்பமேட்டு சிதைப்பி அதிகபட்ச வாயு-நீர்ம தொடர்பை வழங்கும் விதத்தில் வினையுலையின் அழுத்தத்தின் கீழ் செயல்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அமோனியா சுதந்திரமாக வெளியேறுவதால் திரவ மேற்பரப்பில் அதன் பகுதி அழுத்தம் குறைந்து நேரடியாக கார்பமேட்டு மின்தேக்கியுள் அது கொண்டு செல்லப்படுகிறது. முழு உலையின் அழுத்தத்திலே இச்செயலும் நிகழ்கிறது. மாற்றியமைக்கப்பட்ட அமோனியம் கார்பமேட்டு திரவம் அங்கிருந்து நேரடியாக உலைக்குள் செல்கிறது. இது மொத்த மறுசுழற்சி செயல்முறையின் நடுத்தர அழுத்த கட்டத்தை முற்றிலுமாக நீக்குகிறது.
 
அகற்றல் கோட்பாட்டுச் செயல்முறை ஒரு பெரிய முன்னேற்றத்தைக் கொடுப்பதாக இருந்தது. போட்டியாளர்களான இத்தாலியின் சாய்பெம் என்றழைக்கப்படும் சினாம்ப்ரோகெட்டி நிறுவனம், முன்னாள் மாண்டெடிசன் என்ற இத்தாலிய நிறுவனம், சப்பானைச் சேர்ந்த டொயோ பொறியியல் கார்ப்பரேசன் நிறுவனம் மற்றும் சுவிட்சர்லாந்தின் காசலே நிறுவனம் போன்ற அனைத்து போட்டி தயாரிப்பாளர்களும் இக்கோட்பாட்டின் வளர்ச்சியடைந்த பதிப்புத் திட்டத்தையே பயன்படுத்துகின்றன. இன்று, அனைத்து புதிய யூரியா தொழிற்சாலைகளும் திறம்பட இக்கொள்கையைப் பயன்படுத்துகின்றன. மேலும் பல மறுசுழற்சி யூரியா தொழிற்சாலைகள் அகற்றும் செயல்முறை தொழிற்சாலைகளாக மாறியுள்ளன. இந்த அணுகுமுறைக்கு எதிரான ஒரு தீவிர மாற்றுத்திட்டத்தை எவரும் முன்மொழியவில்லை. பெரிய தனிநபர் ஆலைகளுக்கான தொழில்துறை கோரிக்கைகளுக்கு விடையிறுக்கும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய உந்துதல், தொழிற்சாலையின் முக்கிய பொருட்களை மறு கட்டமைத்தல் மற்றும் மாறுபட்ட நிலைக்குத் தக்கவாறு மறு- திசை திருப்புதல் போன்ற செய்ல்பாடுகளை மேற்கொள்வதாகும். இதன் விளைவாக தொழிற்சாலையின் அளவும் ஒட்டுமொத்த உயரமும் குறைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் செயல்திறனை எதிர்கொள்வதற்கான திறனும் மேம்படுகிறது <ref>{{cite conference | vauthors = Gevers B, Mennen J, Meessen J | year = 2009 | title = Avancore – Stamicarbon's New Urea Plant Concept | conference = Nitrogen+Syngas International Conference | location = Rome | pages = 113–125}}</ref><ref>{{cite journal|url=http://www.bcinsight.com/sitemap_issue_articles.asp?issueID=229|title=World Class Urea Plants|journal=Nitrogen+Syngas|volume=294|pages= 29–38 |year=2008}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யூரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது