பார்மால்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
பல எளிய கார்பன் சோ்மங்களோடு ஒப்பிடும் போது பார்மால்டிகைடு சற்றே சிக்கலான வெவ்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளது. ஒரு வாயுவாக பார்மால்டிகைடு நிறமற்ற வாயுவாகும். காரமான எரிச்சலூட்டும் மணம் இச்சேர்மத்தை அடையாளப்படுத்துகிறது. ஒடுக்கும் வினைக்கு உட்படுத்தும்போது இவ்வாயு பார்மால்டிகைடின் வெவ்வேறு மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பிற வடிவங்களாக மாறுகிறது. இவையனைத்தும் பல்வேறு நடைமுறை பயன்களைக் கொண்டுள்ளன. [[1,3,5-டிரையாக்சேன்]] எனப்படும் வளைய முப்படி மெட்டா பார்மால்டிகைடு ஒரு முக்கியமான பார்மால்டிகைடு வழிப்பெறுதியாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு (CH2O)3 ஆகும். பாராபார்மால்டிகைடு என்ற நேரியல் பலபடியும் நன்கு அறியப்படுகிறது. இச்சேர்மங்கள் யாவும் ஒத்த வேதியியல் பண்புகளையும் பெரும்பாலும் ஒன்றுக்கு மாற்றாக மற்றொரு சேர்மத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் உள்ளன.
 
[[File:Paraformaldehyd.svg|left|thumb|தொழில்துறை பயன்பாடுகளுக்குப் பயன்படும் பார்மால்டிகைடின் பொது வடிவமான பாராபார்மால்டிகைடு]]
 
பார்மால்டிகைடை நீரில் கரைக்கும் போது மெத்தேன்டையால் என்ற நீரேற்றாக உருவாகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு H2C(OH)2 ஆகும். இக்கரைசலின் செறிவு மற்றும் வெப்பநிலைக்கு ஏற்ப இச்சேர்மம் பல்வேறு வகையான சில்படிமங்களாக காணப்படுகிறது. 40 சதவீத பார்மால்டிகைடை கொண்ட பூரித நீர்க்கரைசல் அல்லது நிறையளவில் 37 சதவீத அளவு கொண்ட பார்மால்டிகைடு கரைசல் 100 சதவீத பார்மலின் என்று அழைக்கப்படுகிறது. மெத்தனால் போன்ற நிலைப்படுத்தி கரைசலுடன் சிறிதளவு சேர்க்கப்பட்டு ஆக்சிசனேற்ற வினையும் பலபடியாதல் வினையும் அடக்கப்படுகிறது. வணிகரீதியிலான பார்மலின் 10–12% மெதனாலைக் கொண்டிருக்கிறது. பார்மலின் என்ற வணிகப் பெயரானது வணிகரீதியில் மிக நீண்ட நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது<ref name="MW_Collegiate">{{Citation |author=Merriam-Webster |authorlink=Merriam-Webster |title=Merriam-Webster's Collegiate Dictionary |publisher=Merriam-Webster |url=http://unabridged.merriam-webster.com/collegiate/ |postscript=.}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பார்மால்டிகைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது