"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு சென்னை, தேனி, மதுரையில் நடத்துவதற்குத் திட்டமிட்டுப் பிற கல்வி நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். உறுதியானதும் இங்கே அறிவிக்கிறோம். வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்க. வெவ்வேறு பகுதிகளில் தொடர்தொகுப்புகள் நடத்த ஆர்வமிருந்தாலும் அறியத் தரலாம். திட்டமிடுவோம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:27, 13 பெப்ரவரி 2020 (UTC)
 
== வேங்கைத் திட்டம் 2.0 - தமிழ் விக்கிப்பீடியர்கள் வெற்றி! ==
 
வேங்கைத் திட்டம் 2.0வில் தமிழ் விக்கிப்பீடியர்கள் 2924 கட்டுரைகளை உருவாக்கி/விரிவாக்கி வெற்றி பெற்றுள்ளதாக இந்திய விக்கி மடற்குழுமத்தில் அறிவித்துள்ளார்கள். சென்ற ஆண்டு வென்ற பஞ்சாபியர் 1747 கட்டுரைகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்கள். சென்ற ஆண்டு நாம் எழுதியதே 1200 கட்டுரைகள் அளவில் தான். அதையே முன்னணி இடைவெளியாகக் கொண்டு அரும் பெருஞ் சாதனை புரிந்துள்ளோம். இந்த முயற்சியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக அயராது உழைத்த அனைத்து விக்கிப்பீடியர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:30, 13 பெப்ரவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2910294" இருந்து மீள்விக்கப்பட்டது