மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
'''மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்''' (''Project Madurai'') என்பது [[தமிழ்]] இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 [[பொங்கல்]] தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். [[மே 2007]] இல் சுமார் 270 [[மின்னூல்]]கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
 
இத்திட்டத்தின் தலைவராக [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] இருக்கும் முனைவர் [[கு. கல்யாணசுந்தரம்]]<ref>{{cite web | url=https://groups.yahoo.com/neo/groups/pmadurai/info | title=மதுரைத் திட்டம் | accessdate=சூலை 10, 2014}}</ref> என்பவரும் துணைத்தலைவராக [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிலுள்ள]] முனைவர் [[குமார் மல்லிகார்ஜுனன்]]<ref>{{cite web | url=http://www.projectmadurai.org/volunteers.html | title=Project Madurai- Management Team | accessdate=சூலை 10, 2014}}</ref> என்பவரும் உள்ளனர்.
எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகலாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்லும் ஒரு கூட்டு முயற்சியே மதுரைத் திட்டமாகும்.