வங்காளதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 188:
1905க்கும் 1911க்கும் இடையில், டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்குப் பகுதியொன்றை உருவாக்கும் நிறைவேற்றப்படாத வங்காள மாகாணத்தை இரண்டு பகுதிகளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.<ref>Baxter, pp. 39–40</ref> 1947ல் பிரித்தானியப் பேரரசின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சமய அடிப்படையில் வங்காளம் பிரிக்கப்பட்டது. இதன் மேற்குப்பகுதி [[இந்தியா]]வுடன் இணைய கிழக்குப்பகுதி (முசுலிம் பெரும்பான்மை) டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்கு வங்காளம் (பின்னர் கிழக்குப் பாகிஸ்தான்) எனும் பெயரில், [[பாக்கித்தான்|பாகிஸ்தானுடன்]] இணைந்தது.<ref name="collins">{{cite book |last=Collins |first=L |coauthors=D Lapierre |year=1986 |title=Freedom at Midnight, Ed. 18 |publisher=Vikas Publishers, New Delhi |isbn=0-7069-2770-2}}</ref> 1950ல், கிழக்கு வங்காளத்தில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மானியமுறை ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது.<ref>Baxter, p. 72</ref> பொருளாதார மற்றும் மக்கட்தொகை விகிதாசாரத்தில் கிழக்குப் பகுதி செல்வாக்குச் செலுத்தினாலும், பாகிஸ்தானின் அரசாங்கமும், ராணுவமும், மேற்குப்பகுதியின் உயர் வகுப்பினரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. 1952ன் வங்காள மொழி இயக்கமே கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான முதல் விரிசலாக அமைந்தது.<ref>Baxter, pp. 62–63</ref> அடுத்த பத்தாண்டுகளில், பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மத்திய அரசாங்கத்துடனான பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கின. இக்காலப்பகுதியில், வங்காளி பேசும் மக்களின் அரசியல் குரலாக அவாமி லீக் எழுச்சி பெற்றது. 1960களில், இது சுயாட்சிக்காக கிளர்ச்சியில் ஈடுபட்டது. 1966ல் அதன் தலைவர், சேக் முஜிபுர் ரகுமான் (முஜிப்) சிறையிலிடப்பட்டார். 1969ல், வரலாறு காணாத பிரபல்யமான கிளர்ச்சியின் பின்னர் இவர் விடுவிக்கப்பட்டார். 1970ல், ஒரு பாரிய சூறாவளி கிழக்குப் பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியை அழித்ததோடு, ஐந்து லட்சம் பேரையும் கொன்றது.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/1483615/Bangladesh-cyclone-of-1991 Bangladesh cyclone of 1991]. Britannica Online Encyclopedia.</ref> எனினும், மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 1970 தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற சேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி<ref>Baxter, pp. 78–79</ref> ஆட்சியமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டமையால் வங்காள மக்களின் கோபம் அதிகரித்தது.
 
முஜிபுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதைத் தொடர்ந்து, சனாதிபதி யாஹ்யா கான் மற்றும் ராணுவத் தலைவர்கள் ''ஒப்பரேசன் சேர்ச்லைட்''<ref name="salik">{{cite book |last=Salik |first=Siddiq |year=1978 |title=Witness to Surrender |publisher=Oxford University Press |isbn=0-19-577264-4}}</ref> எனப்பட்ட ராணுவ நடவடிக்கையை கிழக்குப் பாகிஸ்தான் மீது நடத்தினர். இதன் மூலம், மார்ச்சு 26, 1971ல், அதிகாலை நேரத்தில், முஜிபுர் ரகுமானைக் கைது செய்தனர். யாஹ்யா கானின் இந்நடவடிக்கை மிகவும் கொடூரமானதாக இருந்ததோடு, போரின்போது இடம்பெற்ற வன்முறைகளால் பலர் இறந்தனர்.<ref name="Rummel">Rummel, Rudolph J., [http://www.hawaii.edu/powerkills/SOD.CHAP8.HTM "Statistics of Democide: Genocide and Mass Murder Since 1900"], {{ISBN|3-8258-4010-7}}, Chapter 8, table 8.1. Rummel comments that, ''In East Pakistan (now Bangladesh) [General Agha Mohammed Yahya Khan and his top generals] planned to indiscriminately murder hundreds of thousands of its Hindus and drive the rest into India. And they planned to destroy its economic base to ensure that it would be subordinate to West Pakistan for at least a generation to come. This despicable and cutthroat plan was outright [[genocide]].''</ref> இதில் முக்கிய இலக்குகளாக இருந்தோர் அறிஞர்களும் இந்துக்களுமாவர். மேலும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அகதிகள் அருகிலுள்ள இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர்.<ref name="laporte">{{cite journal |doi=10.1525/as.1972.12.2.01p0190a |last=LaPorte |first=R |year=1972 |title=Pakistan in 1971: The Disintegration of a Nation |journal=Asian Survey |volume=12 | issue = 2|pages=97–108}}</ref> போரின்போது படுகொலை செய்யப்பட்டோர் தொகை முப்பதினாயிரத்திலிருந்து, மூன்று மில்லியன் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name=Rummel-8-2>Rummel, Rudolph J., [http://www.Hawaii.edu/powerkills/SOD.CHAP8.HTM "Statistics of Democide: Genocide and Mass Murder Since 1900"], {{ISBN|3-8258-4010-7}}, Chapter 8, [http://www.hawaii.edu/powerkills/SOD.TAB8.2.GIF Table 8.2 Pakistan Genocide in Bangladesh Estimates, Sources, and Calcualtions].</ref> ஐக்கிய [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]]வின் நேரடித் தலையீடு காரணமாக சனவரி 8, 1972ல் முஜிபுர் ரகுமான் விடுதலை செய்யப்பட்டார்.<ref>[http://www.pakblog.net/2012/01/sheikh-mujib-ur-rehman-release-and.html Sheikh Mujibur Rehman release and events on 8 January 1972]. Pakblog.net (2012-01). Retrieved on 26 June 2012.</ref>
 
அவாமி லீக்கின் தலைவர்கள் இந்தியாவின் [[கொல்கத்தா|கல்கத்தாவில்]] நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டனர். ஏப்ரல் 17, 1971ல், அது கிழக்கு பாகிஸ்தானின் குஸ்தியா மாவட்டத்திலுள்ள மெஹெர்பூரில் முறையாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டது. இதன்படி, தாஜுதீன் அஹமட் முதல் பிரதமராகவும், சையத் நஸ்ருல் இஸ்லாம் தற்காலிக சனாதிபதியாகவும் பதவியேற்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது