பட்டாம்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன
வரிசை 26:
'''பட்டாம்பூச்சி''' அல்லது '''வண்ணத்துப் பூச்சி''' அல்லது '''வண்ணாத்திப் பூச்சி''' (''butterfly'') என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் [[பூச்சி]] இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து [[தேன்|தேனை]] உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புறச்செய்யும். முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் [[உயிரினம்|உயிரின]] வகைப்பாடுகளில் '''லெப்பிடோப்டரா''' (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த [[அறிவியல் பெயர்|அறிவியல் பெயரில்]] உள்ள'' லெப்பிசு'' (Lepis) என்பது [[செதில்]] என்று பொருள்படும், ''தெரான்'' (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். எனவே பட்டாம்பூச்சிகள் ''செதிலிறகிகள்'' என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பொதுவில் [[இரவு|இரவில்]] இரை தேடும் [[விட்டில் பூச்சி]]களும் இந்த செதிலிறகிகள் இனத்தில் அடங்குபவை.உண்மைப் பட்டாம்பூச்சிகள்(பாப்பிலியோனோய்டியா), தலைமைப் பட்டாம்பூச்சிகள் (எசுபெரியோடியா), அந்துப்பூச்சி பட்டாம்பூச்சிகள் (எடிலோய்டியா) முதலிய பலவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும்.40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இடை [[இயோசீன்]] சகாப்தத்துடன் பட்டாம்பூச்சிப் படிமங்கள் தொடர்புடையனவாக நம்பப்படுகிறது<ref name=halletal2004>{{cite journal | author = Hall J.P.W., Robbins R.K., Harvey D.J. | year = 2004 | title = Extinction and biogeography in the Caribbean: new evidence from a fossil riodinid butterfly in Dominican amber | url = | journal = Proceedings of the Royal Society B | volume = 271 | issue = 1541| pages = 797–801 | doi = 10.1098/rspb.2004.2691 | pmid=15255097 | pmc=1691661}}</ref>.
 
பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது [[பப்புவா நியூகினி]] நாட்டில் காணப்படும் ''குயின் அலெக்ஸாண்டிரா'' என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். [[அமெரிக்காஅமெரிக்காக்கள்|அமெரிக்காவில்]]வில் காணப்படும் ''மேற்குக் குட்டிநீலம்'' எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும். பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிகப்பலவும் [[வெப்ப வலயம்|வெப்ப மண்டலக் காடுகளில்]] வாழ்ந்தாலும், சில குளிர்மிகுந்த உயர் மலைப்பகுதிகளிலும் ([[இமய மலை]]யிலும்), [[கனடா]]வின் வடமுனைக்கு அருகான பகுதியிலும், கடும் [[வெப்பம்]] நிறைந்த பாலைநிலங்களிலும் கூட வாழ்கின்றன. இப்பூச்சிகள் [[பல்லுருத்தோற்றம் (உயிரியல்)|பல்லுருத்தோற்றத்தை]] வெளிப்படுத்தினாலும் ஒன்றைப் போல மற்றொன்றின் தோற்றம், பண்புகள், ஒலியெழுப்புதல், இருப்பிடம் முதலியவற்றில் ஒன்றுபட்டு வண்ணத்துப்பூச்சிகளாகவே காணப்படுகின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ [[மீட்டர்|மீட்டருக்கும்]] அதிகமான தொலைவு) [[வலசை]]யாகப் பறந்து செல்கின்றன (எ.கா: வட அமெரிக்க செவ்வரசு பட்டாம்பூச்சி (monarch butterfly, மானார்க் பட்டாம்பூச்சி) சிலவகைப் பட்டாம்பூச்சிகள் ஒருசெல் உயிரினங்கள், ஈக்கள், எறும்புகள், முதுகெலும்பற்றவை மற்றும் முதுகெலும்புள்ளவை போன்றவற்றுடன் [[ஒட்டுண்ணி]]களாகவும் வாழ்கின்றன<ref name = Brewer>{{cite journal |last=Brewer |first=Jo |author2=Gerard M. Thomas |year=1966 |title=Causes of death encountered during rearing of Danaus plexippus (Danaidae) |journal=Journal of the Lepidopterist's Society |volume=20 |issue=4 |pages=235–238 |url=http://research.yale.edu/peabody/jls/pdfs/1960s/1966/1966-20(4)235-Brewer.pdf |format=PDF |accessdate= 2008-04-13 | laysummary =http://research.yale.edu/peabody/jls/htms/1960s/1966-20(4)235-Brewer.htm }}</ref><ref>{{cite journal |last1=Leong |first1=K. L. H. |last2=Yoshimura |first2=M. A. |last3=Kaya |first3=H. K. |last4=Williams |first4=H. |year=1997 |title= Instar Susceptibility of the Monarch Butterfly (''Danaus plexippus'') to the Neogregarine Parasite, ''Ophryocystis elektroscirrha'' |journal=Journal of Invertebrate Pathology |volume=69 |issue=1 |pages=79–83 |doi=10.1006/jipa.1996.4634 |laysummary=http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6WJV-45S96SB-D&_user=10&_rdoc=1&_fmt=&_orig=search&_sort=d&view=c&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=7d4874a42d109805f3a1e77129046e4f |pmid=9028932}}</ref>.
 
[[படிமம்:Cethosia cyane.jpg|thumb|250px|இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் பட்டாம்பூச்சி]]
"https://ta.wikipedia.org/wiki/பட்டாம்பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது