சைமன் காசிச்செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 31:
==இளமைக் காலம்==
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி]] மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட [[கொழும்புச் செட்டி]]மார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள [[புத்தளம்]] என்னும் நகருக்கு அண்மையில் [[கற்பிட்டி]]யில் கவிரியேல் காசிச் செட்டியின் புதல்வராகப் பிறந்தார். இன்று [[சிங்களம்|சிங்கள]]ப் பிரதேசமாக மாறிவிட்ட இப்பகுதி அக்காலத்தில் பெருமளவு [[தமிழர்]] வாழ்ந்த பகுதியாக இருந்தது. வணிக மொழியாகவும் [[தமிழ்|தமிழே]] விளங்கியது. தமிழ் நாட்டைச் சேர்ந்த செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர். காலப் போக்கில் இவர்கள் பிரித்தானியர் நடையுடைகளையும், அவர்கள் சமயத்தையும் சார்ந்து கொழும்புச் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இளம் வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், [[சிங்களம்]], அக்காலத்து ஆட்சி மொழியான [[ஆங்கிலம்]] என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர, [[சமஸ்கிருதம்]], [[போத்துக்கீச மொழி]], [[டச்சு மொழி]], [[லத்தீன்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[எபிரேயம்]], [[அரபு மொழி]] ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.
 
==இவர் வகித்த பதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_காசிச்செட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது