அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 120:
படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் [[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா பல்கலைக் கழகத்தில்]] எம்.ஏ பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.
 
1913 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து [[பொருளாதாரம்]], [[அரசியல்]], [[தத்துவம்]] மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார். அங்கு அவர் [[1915]]-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு [[பட்டம் (கல்வி)|முதுகலைப் பட்டம்]] பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் 'இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர் நூலாக இன்றும் உள்ளது. மேலும் அம்பேத்கர் '[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் இந்தியாவில்]] அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு [[1921]]-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு [[1923]]-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
 
== சமூகப்பணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது