பல் மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 15:
16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் கைவினைஞர்களால் பல்மருத்துவம் பின்பற்றப்பட்டது. இவர்களில் ஒருவரான ஐசக் கிரீன்வுட் அமெரிக்காவில் பிறந்த முதல் பல்மருத்துவராகக் கருதப்படுகிறார். இவரது மகன்களில் ஒருவரான ஜான் க்ரீன்வுட், ஜார்ஜ் வாஷிங்டனின் பல் மருத்துவராக இருந்துள்ளார். இவர் காலால் சுழலும் உளியினை, பற்சிதைவினை நீக்க முதலில் வடிவமைத்தார். ஜேம்ஸ் மோரிசன் இவ்வகை காலால் சுழலும் உளிக்கு முதலில் [[காப்புரிமை]] பெற்று அதனை வர்த்தக அளவில் கொண்டு வந்தார்.
 
1844 இல் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] பல் மருத்துவரான ஹோர்ஸ் வெல்ஸ் என்பவர் நைட்ரஸ் ஆக்சைடின் மயக்கநிலைப் பண்புகள் பற்றி முதலில் கண்டறிந்தார். இருப்பினும் பல் நீக்கத்தின் அவரது சோதனை, பொதுமக்கள் முன் நிகழ்த்தப்படும் போது தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்பவர் ஈதர்-ன் மயக்கப்பண்புகள் பற்றி 1846 இல் வெளிப்படுத்தினார். இருப்பினும் முதல் மயக்கமருந்தினைக் கண்டறிந்ததற்கான அங்கீகாரம் ஹோர்ஸ் வெல்லுக்கே பின்னர் வழங்கப்பட்டது.
 
போன்சி என்பவர் முதல் வெண்மண் பாகைகளை (porcelain crown) உருவாக்கினார். இது அதுவரை புழக்கத்தில் இருந்த பல்மருத்துவதில் புதிய அழகுணர்வைச் சேர்த்தது. சாமுவேல் ஸ்டாக்சன் இதனை வர்த்தக அளவில் பிரபலப்படுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/பல்_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது