ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Bundesarchiv_Bild_183-R77799,_Berlin_-_Karlshorst,_die_deutsche_Kapitulation.jpg" நீக்கம், அப்படிமத்தை Reinhard Kraasch பொதுக்கோப்பகத்திலிரு...
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன
வரிசை 28:
:வேறு வழியின்றி மே 7ம் தேதி அதிகாலை 2.41 மணிக்கு டோனிட்சின் உத்தரவின் பேரில் யோட்ல் நிபந்தனையற்ற சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சி [[பிரான்சு|பிரான்சின்]] ரெய்ம்சு நகரில் அமைந்திருந்த நேச நாட்டு ஐரோப்பிய போர்த் தளபதியின் தலைமையகத்தில் நடைபெற்றது. மறுநாள் இதே போன்று மற்றொரு சரணடைவு நிகழ்ச்சி பெர்லின் நகரில் நடைபெற்றது. ஜெர்மானியத் தளபதி [[வில்லெம் கெய்ட்டெல்]] சோவியத் தளபதி மார்ஷல் கிரகோரி சூக்கோவின் முன்னிலையில் சரணடைவு ஒப்பந்ததித்தில் கையெழுத்திட்டார். போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்து ஜெர்மானியப் படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
[[File:Notice of end of war against German Soldier.jpg|left|thumb|250px|ஐரோப்பாவில் வெற்றி நாள் வாழ்த்துச் செய்தி]]
*'''ஐரோப்பாவில் வெற்றி''': ஜெர்மனி சரணடைந்த செய்தி பரவி [[அமெரிக்காஅமெரிக்காக்கள்|அமெரிக்காவிலும்]]விலும், [[மேற்கு ஐரோப்பா]]விலும் மே 8ம் தேதி கொண்டாட்டங்கள் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் ”வி. ஈ தினம்“ (VE Day - Victory in Europe Day) என்று கொண்டாடப்படுகிறது. சோவியத் யூனியனிலும், [[கிழக்கு ஐரோப்ப்பா|கிழக்கு ஐரோப்பிய]] நாடுகளிலும் மே 9 ம் தேதி வி. ஈ தினம் என்று கொண்டாடப்படுகிறது. (கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள கால வித்தியாசக் காரணத்தால்)
 
*'''போர் நிறுத்தம்''' ஐரோப்பாவில் எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகளில் பெரும்பாலானவை தங்கள் போர்த் தலைமையகத்தின் போர் நிறுத்த ஒப்பந்ததை ஏற்றுக் கொண்டன. ஆனால சில படைப்பிரிவுகள் மட்டும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. ஆர்மி குரூப் மத்தியின் தளபதி ஃபெர்டினான்ட் ஷோர்னர் இந்த சரணடைவு உத்தரவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் (ஹிடலரின் உயிலின்படி ஜெர்மானியப் படைகளின் முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் ஷோர்னர்). இதனால் சோவியத் படைகள் அவரது படைப்பிரிவை அழிக்க பிராக் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கின. இதனால் அச்சம் கொண்டு அவர் [[ஆஸ்திரியா]] நாட்டுக்கு தப்பிவிட்டார். மே 11ம் தேதி ஆர்மி குரூப் மத்தி சோவியத் படைகளிடம் சரணடைந்தது.