கார்ல் சாண்ட்பர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:கிராமி விருது வென்றவர்கள் இணைத்தல்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 25:
}}
 
'''கார்ல் சாண்ட்பர்க்''' (''Carl Sandburg'', பி. [[ஜனவரி 6]], [[1878]] – இ. [[ஜூலை 22]], [[1967]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] இதழாசிரியர், எழுத்தாளர் மற்றும் கவிஞர். மூன்று முறை [[புலிட்சர் பரிசு]] பெற்றவர். அமெரிக்க கவிதை ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
 
[[இலினாய்]] மாநிலத்தில் பிறந்த சாண்ட்பர்க், சிகாகோ டெய்லி நியூஸ் நாளிதழில் பத்திரிக்கையாளராகத் தன் எழுத்து வாழ்வைத் தொடங்கினார். கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள், குழந்தை இலக்கியம், புதினங்கள், திரைப்பட விமர்சனங்கள் என பல்வேறு வகை படைப்புகளை எழுதியுள்ளார். எனினும் அவர் வாழ்ந்த [[சிகாகோ]] நகர் பற்றிய கவிதைகளுக்காகவே அவர் பரவலாக அறியப்படுகிறார். கவிதைத் தொகுப்புகளுக்காக இரு முறையும், [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனின்]] வாழ்க்கை வரலாற்றுக்காக ஒரு முறையும் புலிட்சர் பரிசினை வென்றுள்ளார். அமெரிக்க கவிதையுலகில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள சாண்ட்பர்குக்கு அமெரிக்காவின் பல இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது நினைவாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், தொடருந்துச் சேவைகள் மற்றும் கட்டிடங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
கார்ல் சாண்ட்பர்க் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[இல்லினாய்ஸ்|இல்லினாய்சில்]] கேல்ஸ்பர்க்கில் கிளாரா மாடில்டா (நீ ஆண்டர்சன்), ஆகஸ்ட் சாண்ட்பெர்க் இணையருக்கு பிறந்தார்.<ref>Sandburg's father's last name was originally "Danielson" or "Sturm". He could read but not write, and he accepted whatever spelling other people used. The young Carl, sister Mary, and brother Mart changed the spelling to "Sandburg" when in elementary school.</ref> இவர்கள் சுவீடிசு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.<ref>{{Cite web|url=https://www.u-s-history.com/pages/h3767.html|title=Carl Sandburg|website=www.u-s-history.com|language=en|access-date=2019-10-30}}</ref> தொடக்கப் பள்ளியில் சார்லஸ் அல்லது சார்லி என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார். பதிமூன்று வயதில் பள்ளிப் படிப்பை இடை நிறுத்தி பால் வண்டி ஓட்டத் தொடங்கினார். சுமார் பதினான்கு வயது முதல் பதினேழு அல்லது பதினெட்டு வயது வரை கேல்ஸ்பர்க்கில் உள்ள யூனியன் ஹோட்டல் முடிதிருத்தகத்தில் கூலிக்கு வேலைச் செய்தார்.<ref>{{Cite web|url=http://timforsythe.com/|title=Tim Forsythe|website=Tim Forsythe|access-date=2019-10-30}}</ref> அதன் மீண்டும் பதினெட்டு மாதங்கள் பால் விநியோகம் செய்யத் தொடங்கினார். பின்னர் கன்சாவின் கோதுமை சமவெளிகளில் விவசாயியாக வேலை செய்தார்.<ref>''Selected Poems of Carl Sandburg'', edited by Rebecca West, 1954</ref> பல இடங்களில் வேலை பார்த்த பின் பத்திரிகையாளராக எழுத்து வாழ்க்கையை தொடங்கினார். கவிதை, வரலாறு, சுயசரிதை, புதினங்கள், சிறுவர் இலக்கியம் மற்றும் திரைப்பட விமர்சனங்கள் என்பவற்றை எழுதினார். எசுப்பானிய அமெரிக்க போரின் போது இராணுவத்தில் இணைய முன்வந்தார்.<ref>{{Cite web|url=https://archive.org/details/vfwourfirstcentu00maso_0|title=VFW: Our First Century|last=Mason, Jr., Herbert Molloy (1999). Kolb, Richard K. (ed.).|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> பின்னர் கேலெஸ்பர்க்கிற்குத் திரும்பி  லோம்பார்ட் கல்லூரியில் பயின்றார். பட்டம் பெற முன் கல்லூரியில் இருந்து விலகிவிட்டார். பின் விஸ்கான்சின் மில்வாக்கிக்குச் சென்று சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்தார். இக் கட்சி பிற்காலத்தில் அமெரிக்க சோசலிச கட்சி என அறியப்பட்டது. 1910 ஆம் ஆண்டு முதல் 1912 ஆண்டு வரை மில்வாக்கியின் மாநகர தலைவரிடம் செயலாளராக பணியாற்றினார்.<ref>"Revolt Develops Poet", ''The Western Comrade,'' vol. 2, no. 3 (July 1914), p. 23.</ref>
 
== எழுத்துப்பணி ==
"https://ta.wikipedia.org/wiki/கார்ல்_சாண்ட்பர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது