அமர் கோ. போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம்:Amar gopal bose.jpg
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 5:
| birth_date = {{birth date|mf=yes|1929|11|2}}
| death_date = {{death date and age|mf=yes|2013|07|12|1929|11|2}}
| birth_place = [[ஃபிலடெல்ஃபியா]], [[பென்சில்வேனியா]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]
| death_place = [[வேலாந்து, மாசாச்சுசெட்டு]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]].
| ethnicity = [[இந்தியவழி அமெரிக்கர்]]
| occupation = [[போசு வணிகநிறுவனம்|போசு வணிகநிறுவன]] நிறுவனரும் அதன் தலைவரும்.
வரிசை 19:
}}
 
<big>'''அமர் கோபால் போசு'''</big> (Amar Gopal Bose) (நவம்பர் 2, 1929 {{spaced ndash}} சூலை 12, 2013) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் பேராசிரியராகவும் தொழில்முனைவோருமாக இருந்தவர். போசு [[ஒலிபெருக்கி]]கள் செய்து விற்கும் போசு வணிகநிறுவனத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தவர். மாசாச்சுசெட்டு தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராக 45 ஆண்டுகள் இருந்தார்<ref>[http://www.nytimes.com/2013/07/13/business/amar-g-bose-acoustic-engineer-and-inventor-dies-at-83.html?src=me&ref=general "Amar G. Bose, Acoustic Engineer and Inventor, Dies at 83"] ''[[த நியூயார்க் டைம்ஸ்]]''. Retrieved 13 July 2013.</ref>. 2011 இல் இவர் போசு வணிகநிறுவனத்தின் பெரும்பான்மைச் சொத்தை [[மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகம்|மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்துக்கு]], பங்குதாரர்-வாக்கில்லாத நற்கொடையாக அதன் கல்விப்பணிக்கும் ஆய்வுக்குறிக்கோள்களுக்குமாக அளித்தார்<ref name='mit'>{{cite news | title = Amar Bose ’51 makes stock donation to MIT | date = 2011-04-29 | work = [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்]] | accessdate = 2012-02-05}}</ref>
 
2007 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஃசு 400 (Forbes 400) என்னும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இவர் 271 ஆம் இடத்தில் மொத்த சொத்து மதிப்பாக அமெரிக்க $1.8 பில்லியன் கொண்டவராக வரிசைப்படுத்தப்பட்டார்<ref>{{cite web|url=http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/|title=Four Indian Americans make it to Forbes list|publisher=www.expressindia|accessdate=February 18, 2008| archiveurl= http://web.archive.org/web/20080216203023/http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/| archivedate= February 16, 2008 <!--DASHBot-->| deadurl= no}}</ref> 2009 ஆம் ஆண்டில் இவர் இந்தப் பில்லியனர் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் மீண்டும் 2011 ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்கத் தாலர் சொத்து உடையவராகப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்<ref>{{cite web|url=http://www.forbes.com/profile/amar-bose|title=Amar Bose's profile|publisher=www.forbes.com|accessdate=April 2, 2011}}</ref>
==இளமைக்காலமும் கல்வியும்==
போசு, அமெரிக்காவில் உள்ள [[பென்சில்வேனியா]] மாநிலத்தில் உள்ள [[ஃபிலடெல்ஃபியா]] நகரில் நோனி கோபால் போசு என்பவருக்கும் ஓர் அமெரிக்கப் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் இந்திய விடுதலைக்கான எழுச்சிகளில் பங்குகொண்ட வங்காளியர்<ref>{{cite web|url=http://www.outlookindia.com/article.aspx?201416 |title=Rich & Famous In The US &#124; Padma Rao Sundarji |publisher=Outlookindia.com |date=1996-05-22 |accessdate=2012-07-21}}</ref>, அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை சென்றவர், ஆனால் 1920 இல் பிரித்தானிய அடக்குமுறையில் இருந்து தப்பிக்க [[கொல்கத்தா]]வை விட்டு வெளியேறி [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் குடியேறியவர் <ref>{{cite news | first = Brad | last = Lemley | title = Discover Dialogue: Amar G. Bose | date = 2004-10-01 | url = http://discovermagazine.com/2004/oct/discover-dialogue | work = [[Discover (magazine)|Discover Magazine]] | accessdate = 2012-02-01}}</ref>. அமர் போசு, தன் 13 ஆவது அகவையிலேயே தொழில்முனையும் தன்மையையும், மின்னணுவியல் (எதிர்மின்னியியல்) துறைகளில் உள்ள ஆர்வத்தையும் காட்டினார்<ref>[http://www.siliconeer.com/past_issues/2005/january2005.html Siliconeer: January 2005]</ref>.
 
பென்சில்வேனியாவில் ஆபிங்டன் மேனில உயர்நிலைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்ற பின்னர், [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்|மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில்]] சேர்ந்து இளநிலை அறிவியல் (மின்பொறியியல்) (BS) பட்டத்தை 1950 களில் பெற்றார். அதன் பின் [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] உள்ள [[ஐண்டோவன்]] (Eindhoven)இல் உள்ள [[பிலிப்ஃசு நிறுவனம்|பிலிப்ஃசு நிறுவனத்தின்]] ஆய்வுச்சாலையில் ஓராண்டு பணியாற்றினார். பின்னர் ஃபுல்பிரைட்டு (Fulbright) ஆய்வு மாணவராக [[இந்தியா]]வில் [[புது தில்லி]]யில் ஒராண்டு இருந்தார். அப்பொழுதுதான் தன் பிற்கால மனைவியாகிய பிரேமா அவர்களைச் சந்தித்தார். இவர்கள் பின்னாளில் மணவிலக்கு பெற்றனர். இவர் மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் நோர்பர்ட்டு வீனர் (Norbert Wiener), இயூக்கு-இங்கு இலீ (Yuk-Wing Lee) ஆகியோரின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் முனைவர்ப் பட்ட ஆய்வு நேர்சார்பிலா ஒருங்கியங்களப் (non-linear systems) பற்றியது.
"https://ta.wikipedia.org/wiki/அமர்_கோ._போசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது