சோழர் காலக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிரகதீஸ்வரர் எனது பின்னால் ஏற்பட்ட மாற்றம், பெருவுடையார் என்பதே சிறந்தது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
 
[[படிமம்:Thanjavur Brihadeeswara Temple side view.JPG|thumb|250px|தஞ்சை பெரிய கோயில், சோழர் காலக் கட்டிடக்கலையின் முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டு]]
பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் [[இராஜராஜ சோழன்]] பட்டத்துக்கு வந்தபின்னர் சோழப் பேரரசின் வலிமை ஏறுமுகத்தில் இருந்தது. இதன் வெளிப்பாடாக இவன் காலத்திலும், இவன் மகனான [[இராஜேந்திர சோழன்]] காலத்திலும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றுள் கி.பி 1003 ஆண்டு தொடங்கப்பட்டு 1010 ல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் என்ற அழைக்கப்படும் [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|பெருவுடையார் கோயில்]]<nowiki/> மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர்காலக் [[கட்டிடக்கலை|கட்டிடக்கலையின்]] முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்படும் இக் கோயில் [[இந்தியா|இந்தியாவில்]] கட்டப்பட்ட எந்தக் கோயிலிலும் அளவில் பெரியது எனக் கருதப்படுகின்றது. 90 அடி அகலம், 90 அடி நீளமுடைய கருவறைக்கு மேல் 190 அடியும், நிலத்திலிருந்து 210 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது இக் கோயில்.
 
இதைத் தொடர்ந்து பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இராசேந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்டதே [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள]] கோயில். இதன் விமானம் 150 அடி உயரமுள்ளது. தான் பெற்ற போர் வெற்றிகளுக்கான சின்னமாகத் தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பைப் பின்பற்றிக் கட்டப்பட்டது இக் கோயில். கம்பீரமும்,பொலிவும் கொண்ட தஞ்சைக் கோயிலுடன் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலை ஒப்பிடமுடியாதெனினும், இங்கே அமைந்துள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் சோழப்பேரரசின் உச்சகட்ட வலிமையை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_காலக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது