விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 450:
 
:நன்றி. [[பயனர்:Jagadeeswarann99]], [[பயனர்:பா.ஜம்புலிங்கம்]] [[பயனர்:ஞா. ஸ்ரீதர்]]. இதுபோல இனி நடக்காமல் இருக்க, நாம் பின்வரும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என முன்மொழிகிறேன். பொதுவாக ஊடகங்களுக்கு தர வேண்டிய செய்திகளை இங்கேயே, முன்கூட்டியே எழுதி வைத்துத் தருதல் சிறப்பாகும். யார் எப்பொழுது வினவுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது அல்லவா? மேலும், ஊடகவியலாளர் வினவும் அனைத்தையும், பதிப்பிக்க மாட்டார்கள். மற்றொன்று, ழ்நிலைக்கு ஒப்ப பவுன்டன் கருவியை இப்படி பயன்படுத்துங்கள் என்று கூறினேன். ஏனோ நடுவராக இருக்கும் சிலர் அதை ஏற்க மறுத்தனர். அதுவும் கவனிக்கத் தக்கது. எனவே, பவுன்டன் கருவி இன்னும் வளர, அது குறித்த பின்னூட்டங்களைத் தர வேண்டும். சில மேம்பாடுகள் பவுன்டன் கருவிகள் இருப்பின், எழுதிய கட்டுரை; ஏற்றக் கட்டுரை எண்ணிக்கை வேறுபாடு வராது. “இனி ஒரு விதி செய்வோம்; அதனை எந்நாளும் காப்போம்.” --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:17, 26 பெப்ரவரி 2020 (UTC)
:பதினாறாமாண்டுக் கொண்டாட்டத்தை ஊடகங்களுக்கு அலுவல்பூர்வமாக அனுப்ப முயன்றோம் ஆனால் நடக்கவில்லை. இந்த நிகழ்விலும் அலுவல்பூர்வ அறிவிப்பு என்று சி.ஐ.எஸ்ஸும் ஊடகங்களுக்கு அனுப்பவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவும் ஊடகங்களுக்கு அனுப்பவில்லை. ஊடகத்தில் இதுகுறித்து செய்தியைப் பரப்ப வேண்டும் என்று பல விக்கிப்பீடியர் விரும்பினர். சி.ஐ.எஸ். அறிவிப்பதற்கு சில நாள் முன்னர் தகவலையாவது கொடுங்கள் தமிழ் விக்கிசார்பாகவாவது செய்தியைப் பரப்புகிறோம் என்றோம். ஆனால் சி.ஐ.எஸ் அறிவிப்பை மின்னஞ்சலுடன் நிறுத்திக் கொண்டனர். தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து மேல்விக்கியில் வெற்றியை 19 அன்று அறிவித்தனர். தாய்மொழி நாளையொட்டி எனது தனிப்பட்ட தமிழ்ச்சரம் தளத்தின் வெளியீட்டுப் பணியில் கவனம் செலுத்தியதால் ஜனவரியில் எழுதிவைத்த ஒரு செய்திக் குறிப்பை எனது முகநூலில் வெளியிட்டேன். சர்வதேசத் தாய்மொழி நாளுக்கு முன்னர் ஊடகங்களுக்குச் செல்லவேண்டும் என்பதால் முகநூல் படியை எடுத்து தொடர்பிலுள்ள ஊடக நண்பர்களுக்கு அனுப்பினேன். முதல் நோக்கம் வெற்றிச் செய்தியை அறிவிப்பது, நூறு கட்டுரை மேல் எழுதியவர்களை கௌரவிப்பது, எதிர்காலப் பயனர்களை உள்ளிழுப்பது என்பது மட்டுமே. ஊடகங்களில் வருமா என்றே தெரியாமல் மற்றவர்களிடம் தொடர்புகள் கேட்டே செய்தி அறிக்கை அனுப்பினேன். மொத்தக்கட்டுரை எண்ணிக்கை 2942 என்கிறது சி.ஐ.எஸ்., 2929 என்கிறது பவுண்டைன், போட்டி நிறைவுற்ற காலத்தில் 2959 அடிப்படையில் செய்திகள் வந்துவிட்டன. 629 போட்டி நிறைவு செய்த காலத்தில் உள்ள எண். மதிப்பிடல் முடிந்த பின்னர் 599 ஆக எண்ணிக்கை மாறியுள்ளது. 62 பயனர்கள் என்று செய்தி வந்துவிட்டது ஆனால் 62 என்பது பயனர்பெயர், 61 தான் பயனர்கள், அதில் 60 பயனர்கள் தான் சரியாக எழுதினர். இது போல பிறமொழிகளின் கட்டுரை எண்ணிக்கையிலும் மாற்று எண்ணிக்கையினை அவர்கள் வைக்கிறார்கள். இன்னும் சில எண் முரண்கள் உள்ளன. அந்த மாதிரி 217 என்பது 270 ஆக உரையாடல் கவனக்குறைவில் நிகழ்ந்திருக்கலாம். இப்படிப் பிழைகள் வரும் எனக் கணிக்கவில்லை அதற்கும் முன்னர் இப்படி ஊடகக் கவனம் வரும் என்றும் கணிக்கவில்லை. இதில் எனது பிழை உள்ளது. அதனால் தான் பின்னர் பெரும்பாலான ஆங்கில ஊடகங்களுக்குச் செய்தியை அனுப்பவில்லை. பலரது படங்கள் அனுப்பியும் எந்த ஊடகங்களும் வெளியிடவில்லை இயன்றவரை அனைவரையும் ஊக்கப்படுத்தவே முயல்கிறோம். அதனால் இந்தப் படிப்பினையை ஆக்கப்பூர்வமாகக் கொண்டு அடுத்த நிகழ்வுகளில் கையாளுவோம். போட்டியில் எழுதாமல் கூட துணை நின்றவர்கள் பலர் உள்ளனர். எனவே ஒரு நிகழ்வின் செய்தியால் யாரையும் குறைத்தோ உயர்த்தியோ எண்ணவேண்டாம். இறுதியில், யாரும் ஊடகங்களுக்காக எழுதவில்லை. நமது ஆர்வத்தில்தான் விக்கிப்பீடியாவில் எழுதுகிறோம் அதனால் ஊடகச் செய்தியின் அடிப்படையில் பங்களிப்பு ஊக்கத்தைத் தீர்மானிக்க வேண்டாம் என நினைக்கிறேன். விக்கிப்பீடியாவே பெரிய ஊடகம் தான்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 04:18, 26 பெப்ரவரி 2020 (UTC)
Return to the project page "வேங்கைத் திட்டம் 2.0".