ஏர் எழுபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE SELVAMDIET NKLஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 75:
# நன்மங்கல வாழ்த்து உள்ளிட்டவையாகும்.
 
'''== ஏர் எழுபது''' ==
`ஏர் எழுபது’எழுபது என்ற நூல் கம்பரால் எழுதப்பட்டது ஆகும். இதில் ஏர்த்தொழில் பற்றி 70 செய்யுட்கள் உள்ளது. இந்நூலுக்கு முன் `ஏர்த்தொழில்’ பற்றிய நூல் இல்லை. எனவே `ஏர்த்தொழில்’ குறித்து எழுந்த முதல் நூல் `ஏர் எழுபது’ ஆகும். இந்நூல் சடையப்ப வள்ளலின் முன்னிலையில் 12ஆம் நூற்றாண்டில் கம்பரால் அரங்கேற்றப்பட்டது. உழவுத் தொழிலின் மேன்மை உழவர் பண்பாடு, உழவரின் சிறப்பு, உழவியல் முறைகள், உழவியல் குறிப்புகள், சமுதாய நிலை, கருவிகள் முதலியவற்றை விளக்கிக் கூறுவதால், இந்நூல் `பயன் இலக்கியத்தைச் சார்ந்தது ஆகும்.
செங்கோலை நடத்தும் கோல் ஏரடிக்கும் சிறுகோலே; ஏர் நடக்குமெனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்; உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே; மன்னன், மக்கள், கலை, பண்பாடு போன்றவை உழவுத்தொழிலைச் சார்ந்துள்ளது; ஏரில்லையெனில் போரில்லை; உழவரின் நாற்றுமுடியே மன்னரின் மணிமுடி; போரில் வெற்றி தோல்விகள் உண்டு, உழவரின் களத்தில் தோல்வி என்பதே கிடையாது; சிவனது கழுத்து கறையினும், எருத்தின் கழுத்துத் தழும்பே பெருஞ்சிறப்புடையது; ஞாயிறு, திங்களின் கதிர்கள் உயிர்களை வளர்ப்பதில்லை ஆனால் நெற்கதிர்களோ உயிரை வளர்க்கிறது; உணவால் பசி ஒழிந்தால் மொழி, அறிவு வளரும்; நாடு சிறப்பெய்தும் போன்ற கருத்துக்கள் `ஏர் எழுபதில்’ உள்ளன.
<ref>கந்தசாமி, இவ.செ (1974). ஏர் எழுபது – ஒரு திறனாய்வு. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள். 106-111.</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஏர்_எழுபது" இலிருந்து மீள்விக்கப்பட்டது