சரணடைதல் (படைத்துறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொடி - link(s) தொடுப்புகள் கொடி (சின்னம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 6:
 
== வரலாறு ==
ஒரு வெள்ளைக் கொடி அல்லது [[கைக்குட்டை]] சரணடைவதற்கான விருப்பத்தைக் காட்டும் சைகையாகப் பொதுவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனாலும், [[அனைத்துலகச் சட்டம்|அனைத்துலகச் சட்டங்களின்படி]] இது தீர்வுப் பேச்சுக்களுக்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு சமிக்ஞையையே குறிக்கும். இதன் விளைவு முறையான சரணடைதலாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம்.<ref name="Souza1982">{{cite book|author=Francis Newton Souza|title=The White Flag Revolution: A New Theory, a New Symbol, a New Force, a New Art|url=https://books.google.com/books?id=sgAVAAAAMAAJ|year=1982|publisher=Mastermind Publications|page=70}}</ref> வழமையாக சரணடைதல் ஆயுதங்களைக் கையளிப்பதை உள்ளடக்கியது. முற்கால ஐரோப்பியப் போர்களில், சரணடையும் படைகளின் கட்டளை அதிகாரி தனது வாளை வெற்றி பெற்ற கட்டளை அதிகாரியிடம் கையளிப்பார். தனிப் போர்வீரர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுக் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்துவதன் மூலம் சரணடையலாம். சரணடையும் தாங்கிக் கட்டளை அதிகாரி தாங்கியின் சுடு குழல்களை எதிர்த் தரப்பினரை நோக்காமல் திருப்பிவிட வேண்டும். சரணடைதலுக்கான சைகையாக [[கொடி (சின்னம்)|கொடிகளும்]]களும் சின்னங்களும் இறக்கப்படும் அல்லது சுருட்டப்படும். கப்பலின் கம்பத்தில் வெள்ளைக் கொடி ஏற்றுவது சரணடைதலுக்கான அடையாளம் ஆகும்.<ref>{{cite book |title= A Naval Encyclopedia |location= Philadelphia |publisher= L. R. Hamersly & Co. |year= 1881}}</ref>
 
இது தரப்பும் ஏற்றுக்கொண்டால் சரணடைதல், நிபந்தனைகளுடன் கூடியதாக இருக்கக்கூடும். இதன்படி, வெற்றி பெற்ற தரப்பு சில வாக்குறுதிகளை அளித்த பின்னரே மற்றத்தரப்பு சரணடைய ஒப்புக்கொள்ளும். அல்லது சரணடைதல் நிபந்தனையற்றதாக இருக்கலாம். இவ்வகைச் சரணடைதலில், வெற்றி பெற்ற தரப்பினர், போர்ச் சட்டங்களும் வழக்கங்களும் வழங்கக் கூடியவை தவிர்ந்த வேறெந்த வாக்குறுதிகளையும் வழங்க மாட்டார்கள். இது தொடர்பான பெரும்பாலான சட்டங்களும் வழக்கங்களும், [[1907 ஹேக் ஒப்பந்தம்]], [[செனீவா ஒப்பந்தங்கள்]] ஆகியவற்றில் உள்ளவை ஆகும்.<ref name="What is IHL?">The Program for Humanitarian Policy and Conflict Research at Harvard University, "IHL PRIMER SERIES | Issue #1" Accessed at http://www3.nd.edu/~cpence/eewt/IHLRI2009.pdf</ref> சரணடையும் தரப்பு போரைத் தொடர்ந்து நடத்தக்கூடிய ஆற்றலை இழந்துவிட்டால் நிபந்தனையற்ற சரணடைதலே இடம்பெறக்கூடும்.
"https://ta.wikipedia.org/wiki/சரணடைதல்_(படைத்துறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது