மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்பு (1303): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 48:
 
அந்நேரத்தில் தில்லியில் வாழ்ந்த வரலாற்று ஆய்வாளரான ஜியாவுதீன் பரணி பிற்காலத்தில் எழுதியதன் படி தில்லி நகரமானது எக்காலத்திலும் அதுபோன்ற ஒரு மங்கோலிய பயத்தில் இருந்ததில்லை. அவரது கூற்றுப்படி தரகை மேலும் ஒரு மாதத்திற்கு தில்லியில் தங்கியிருந்திருந்தால் தில்லி நகரமானது தரகையிடம் வீழ்ந்திருக்கும்.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=369}}
 
== பின்விளைவுகள் ==
 
1303 ஆம் ஆண்டின் மங்கோலிய படையெடுப்புக்கு முன்னர் அலாவுதீன் தானே பல தாக்குதல்கள் மற்றும் முற்றுகைகளுக்கு தலைமை தாங்கினார். ஆனால் கிட்டத்தட்ட தில்லியை கைப்பற்றும் நிலைக்கு வந்த தரகையின் படையெடுப்பு அலாவுதீனை கவனமாக இருக்க வைத்தது. இறுதியாக அலாவுதீனின் கிட்டத்தட்ட அனைத்து தாக்குதல்களும் (சிவனா தாக்குதல் தவிர) அவரது தளபதிகளால் (உதாரணமாக மாலிக் கபூர்) மட்டுமே தலைமை தாங்கப்பட்டன. அலாவுதீன் சிரி முகாமிலேயே தங்கினார். அங்கு ஒரு அரண்மனையை கட்டினார். இவ்வாறாக ஒரு காலத்தில் தில்லி நகரத்தின் மதில் சுவர்களுக்கு வெளியில் ஒரு பட்டணமாக இருந்த சிரி, தில்லி சுல்தானகத்தின் தலைநகரமானது. சிரி நகரத்தின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்தது. தில்லியின் பழைய கோட்டை மதில் சுவர்களையும் அலாவுதீன் புனரமைத்தார்.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=372}}
 
மங்கோலிய அச்சுறுத்தலை பலவீனப்படுத்த மங்கோலியர்கள் இந்தியாவுக்கு வரக்கூடிய வழியில் ராணுவ செயல்பாட்டை அலாவுதீன் வலிமைப்படுத்தினார். அவ்வழியில் இருந்த பல்வேறு பழைய கோட்டைகளை புனரமைத்த அலாவுதீன் புதிய கோட்டைகளையும் கட்டினார். சக்தி வாய்ந்த கொத்தவால்கள் (கோட்டை தளபதிகள்) மற்றும் அதிகப்படியான எண்ணிக்கையிலான வீரர்கள் இந்த கோட்டைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தக் கோட்டைகளின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் பொருள் கிடங்குகள் மீண்டும் நிரப்பப்பட்டன. திபல்பூர் மற்றும் சமனா ஆகிய இடங்களில் ஒரு பெரிய இராணுவமானது நிறுத்தப்பட்டது. இது தவிர மங்கோலிய எல்லைப்புறங்களில் இருந்த பகுதிகளில் திறமைவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த உயர்குடியினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் இக்தாக்கள் எனப்படும் வரி வசூலிப்பார்களாக பணியமர்த்தப்பட்டனர்.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=372}}
 
ஒரு தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களை அலாவுதீன் செய்தார். பரணியின் கூற்றுப்படி இந்த சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமானது மங்கோலிய அச்சுறுத்தலை சரி செய்வதற்காக ஒரு வலிமையான ராணுவத்தை பராமரிப்பதற்கான போதுமான வருவாயை ஈட்டுவதாகும்.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=373}}
 
இத்தகைய சீர்திருத்தங்கள் இந்தியா மீது படையெடுப்பதிலிருந்து மங்கோலியர்களை தடுக்கவில்லை. ஆனால் அலாவுதீனின் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சிகளின் போது மங்கோலியர்கள் தீர்க்கமாக தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்தன.{{sfn|Kishori Saran Lal|1950|p=167}}
 
== உசாத்துணை ==