பாம்பன்-இராமேசுவரம் புதிய இருப்புப் பாதை பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பக்கம் பாம்பன்-இராமேஷ்வரம் புதிய இருப்புப் பாதை பாலம் என்பதை பாம்பன்-இராமேசுவரம் புதிய இருப்புப் பாதை பாலம் என்பதற்கு நகர்த்தினார்: இலக்கணம், எளிமை
உ தி
வரிசை 1:
'''பாம்பன் – இராமேஷ்வரம்இராமேசுவரம் புதிய இருப்புப் பாதை பாலம்''', [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] உள்ள [[மண்டபம்]] - [[இராமேஸ்வரம்]] தீவுவை இணைக்கும் புதிய இருவழி [[இருப்புப் பாதை]] பாலமாகும். [[பாக்கு நீரிணை]]யில் அமைய உள்ள இப்புதிய இருப்புப் பாதையை அமைக்கும் பணி 28 பிப்ரவரி 2020 (வெள்ளிக் கிழமை) அன்று துவங்கியது. ரூபாய் 250 கோடி மதிப்பில் நிறுவப்படும் இப்பாலம் 2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இப்பாலம் கட்டுவதற்கு கடலில் 36 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு, 333 தூண்கள் நிறுவப்படவுள்ளது. இத்தூண்களை இணைப்பதற்கு தடித்த 99 எஃகு பட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளத்தில் ஒரே இணைப்பில் தூக்குப்பாலம் அமையவுள்ளது. அதனை மின்மோட்டார் மூலம் தானாகவே திறந்து மூடும் வகையில் அமைக்கப்படுகிறது. தூக்குப்பாலத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு வசதிகளும் இடம் பெறும்.<ref>[https://www.dailythanthi.com/News/Districts/2020/02/28224042/Rs-250-crore-will-be-built-in-Pamban-Sea-To-the-new.vpf பாம்பன் கடலில் ரூ.250 கோடியில் கட்டப்படும் புதிய ரெயில்வே பாலத்துக்கு தூண் அமைக்கும் பணி தொடங்கியது]</ref><ref>[https://www.maalaimalar.com/news/topnews/2020/02/29091723/1298529/New-Railway-Bridge-construction-work-started-in-Pamban.vpf பாம்பன் கடலில் புதிய ரெயில்வே பாலத்துக்கு தூண் அமைக்கும் பணி தொடங்கியது]</ref>
 
இக்கடல் இருப்புப் பாதை பாலம் அமைக்கும் பணியை [[இந்திய ரயில்வே]] மேற்கொள்கிறது. இப்பணியை இரண்டு ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரை பழைய [[பாம்பன் பாலம்]] பயன்பாட்டில் இருக்கும்.