இராமலிங்க அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி History
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 110:
 
====கண்டன நூல்கள்====
வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன. வள்ளலார் மேற்கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றைய [[சைவர்|சைவவாதிகள்]] ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக வள்ளலார் எழுத்துக்களையும் புறம் தள்ளினர். எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்தனர். வள்ளலார் முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர். 1868 இல் சண்முகம் பிள்ளை என்பவரால் [[திருவருட்பா தூஷண பரிகாரம்]] என்னும் நூலின் வழி இவ்விவாதம் தொடங்க ஆரம்பித்தது. 1869 இல் [[போலியருட்பா மறுப்பு]] என்ற நூல் எழுதப்பட்டது; இது அருட்பா அல்ல, போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.
 
1904 இல் [[நா. கதிரைவேற்பிள்ளை]] வள்ளலாருக்கு எதிராக இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது [[மருட்பா மறுப்பு]] என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலுக்கு மறுப்பாக [[ம. தி. பானுகவி]] என்பவர், 1905 இல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். சைவ சமயத்தில் சீர்திருத்தம் செய்த வள்ளலாரை பழைமை வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல் போக்குகளைப் பார்க்கலாம்.<ref>{{cite web | title = மறுப்பு நூல்கள். வள்ளலார் முதல் ஏங்கல்ஸ் வரை | publisher = தீக்கதிர் | date = 28 அக்டோபர் 2013 | url = http://epaper.theekkathir.org/ | page = 8 | accessdate = 28 அக்டோபர் 2013}}</ref>
 
== நினைவு அஞ்சல்தலை ==
"https://ta.wikipedia.org/wiki/இராமலிங்க_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது