இலங்கைத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இலங்கைத் திரைப்படத்துறை''' [[1947]] இல் ஆரம்பித்திருக்கிறது ஆனாலும் சிங்களத் திரைப்படத்துறை வளர்ந்த அந்த ஆரோக்கியமான தன்மையை இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை கொண்டிருக்கவில்லை. சிங்களத் திரைப்படைப்புக்கள் சர்வதேசத்துக்கும் தனது படைப்புக்களைக் காட்டி நின்ற போது தமிழ்த் திரைப்படத்துறை உள்ளூருக்குள்ளேயே காணாமல் போயிருக்கின்றது. ஆனாலும் இன்றுள்ள நிலையில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறையை வளர்த்தெடுக்கும் ஆர்வம் பலரிடம் தோன்றியுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது. இலங்கையின் திரைப்படத் துறையின் ஆரம்பகாலம் முற்று முழுதாக இந்தியாவையே சார்ந்திருந்தது. அதிலும் சுதந்திரம் கிடைத்து நீண்ட ஆண்டுகளாக இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறையினைப் பற்றி யாரும் அதிகளவு சிந்தித்ததாகத் தெரியவில்லை. கணிசமான தமிழ்த் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் உருவானதால் அதில் எங்களவர்கள் திருப்திப்பட்டுப் போயிருக்கலாம். அல்லது இலங்கையில் தமிழ் சினிமா தயாரிப்பதிலும் பார்க்க தென்னிந்திய திரைப்படங்களைத் தருவிப்பது மலிவாகப் பட்டிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் எங்களது இந்த நிலை சிங்களத் திரைப்படத்துறையில் இருக்கவில்லை. இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்து இருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன.
'''இலங்கைத் திரைப்படத் துறை'''க்கு வயது அறுபத்தி ஒன்று. சென்னையில் திரைப்படத் தயாரிப்பு வேகம் பெற்றிருந்த வேளையில் கொழும்பில் சிங்கள சினிமாப்படத் தயாரிப்பில் சிலர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அவர்களில் [[எஸ். எம். நாயகம்]] என்ற தமிழர் ஒரு முன்னோடித் தயாரிப்பாளர். அவர்தான் கொழும்புக்கருகில் ஹெந்தல என்ற இடத்தில் ஸ்ரூடியோ நிறுவி சிங்களத் திரைப்படத் தயாரிப்பில் முதலில் ஈடுபட்டார். அவர் கொழும்பில் தயாரித்த முதல் சிங்களப்படம் [[கடவுனு பொறந்துவ]] - சிதைந்த வாக்குறுதி என்று அர்த்தம். MADE IN CEYLON என்று விளம்பரப்படுத்தி அப்படம் [[1956]]இல் இலங்கையில் ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

அதற்கு முன் சிங்களப்படங்கள் சென்னையிலேயே தயாரிக்கப்பட்டன. அவற்றில் [[சுரத்தலி]], [[சுஜாதா]], [[பைசிக்கிள் ஹொரா]] என எத்தனையோ வெற்றிப்படங்கள். பெரும்பாலான சிங்களப் படங்கள் அந்நாட்களில் தமிழ், ஹிந்தி சினிமாப் படங்களின் சாயலிலேயே எடுக்கப்பட்டன. தமிழ் நடிகர், நடிகைகளும் இவற்றில் நடித்தனர். அன்றைய சிங்கள முன்னணித் திரையுலகத் தம்பதிகள் [[எடி ஜய மன்ன]], ருக்மணி தேவி. [[ருக்மணி தேவி]] இலங்கையரான தமிழ் நடிகை. இதே சமகால இலங்கைத் தமிழ்ப்படம்தான் [[குசுமலதா]]. 1951 ல் கொழும்பில் ஒரிரு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, வெளியிடப்பட்ட அதே வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிய படம். பெயரைப் பார்த்தாலே இது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட சிங்களப் படம் என்று தெரிகிறதல்லவா? எடி ஜய மன்ன, ருக்மணி தேவி நடித்த இப்படம் சென்னையில் தயாரான சங்கவுனு பிலிதுற என்ற சிங்களப் படத்தின் தமிழாக்கம்.

== சிங்கள மொழி பேசும் திரைப்படம் ==
முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் [[ஜனவரி 21]], [[1947]]இல் திரையிடப் பட்டிருக்கிறது. '''கடவுணு பொரன்டுவ (உடைந்த வாக்குறுதி)''' என்ற இந்தத் திரைப்படம் மேற் குறிப்பிட்டதன்படி தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான [[இசை]]யை [[ஆர். நாரயண ஐயர்]] வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் [[முத்துக்குமாரசாமி]] ஆவார். இங்கு முத்துக்குமாரசாமி என்ற இந்த இசைமேதையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர் பின்னாளில் இலங்கையில் இசைத்துறையில் பெரும் கடமையாற்றியிருக்கின்றார். இசைத்துறை வட்டத்தில் முத்துக்குமாரசாமி மாஸ்ரர் என்றே இவர் அழைக்கப்பட்டார். திரைப்படத்துறை மட்டுமல்லாது [[இலங்கை வானொலி]]யிலும் இவரது பணி நிறைந்திருக்கிறது.

== சென்னையிலேயே தயாரிக்கப்பட்ட சிங்களப்படங்கள் ==
[[சுரத்தலி]]
[[சுஜாதா]]
[[பைசிக்கிள் ஹொரா]]

அதற்கு முன் சிங்களப்படங்கள் சென்னையிலேயே தயாரிக்கப்பட்டன. அவற்றில் [[சுரத்தலி]], [[சுஜாதா]], [[பைசிக்கிள் ஹொரா]] என எத்தனையோ வெற்றிப்படங்கள். பெரும்பாலான சிங்களப் படங்கள் அந்நாட்களில் தமிழ், ஹிந்தி சினிமாப் படங்களின் சாயலிலேயே எடுக்கப்பட்டன. தமிழ் நடிகர், நடிகைகளும் இவற்றில் நடித்தனர். அன்றைய சிங்கள முன்னணித் திரையுலகத் தம்பதிகள் [[எடி ஜய மன்ன]], ருக்மணி தேவி. [[ருக்மணி தேவி]] இலங்கையரான தமிழ் நடிகை. இதே சமகால இலங்கைத் தமிழ்ப்படம்தான் [[குசுமலதா]]. 1951 ல் கொழும்பில் ஒரிரு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, வெளியிடப்பட்ட அதே வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிய படம். பெயரைப் பார்த்தாலே இது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட சிங்களப் படம் என்று தெரிகிறதல்லவா? எடி ஜய மன்ன, ருக்மணி தேவி நடித்த இப்படம் சென்னையில் தயாரான சங்கவுனு பிலிதுற என்ற சிங்களப் படத்தின் தமிழாக்கம்.

இலங்கையில் [[1950]] க்கு முன்னரே கூட, சினிமாப் படங்கள் எடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை ஆங்கிலப் படங்கள். 1930-1940களில் ஹாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் திரைப்படக் கம்பெனிகள் இலங்கையில் ஆங்கில சினிமாப்படங்கள் எடுத்திருக்கின்றன. அவற்றில் இன்றும் பேசப்படும் ஒரு படம் Bridge in the River Kwai. இலங்கையின் நீண்ட ஆறுகளில் ஒன்றான களனி கங்கையின் குறுக்கே கித்துல்கல என்ற இடத்தில் இப்படத்திற்கென ஆடு பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்த இடத்தில் இன்றும்கூட இந்த இடத்தில்தான் 'த பிரிஜ் இன் த ரிவர் குவாய் படமாக்கப்பட்டது என்று எழுதப்பட்ட விளம்பரப் பலகை உண்டு. இதைவிட நினைவில் நிற்கும் மற்றொரு படம் ELEPHANT WALK. இது தேயிலைத் தோட்டச் சூழ்நிலையை பின்புலமாகக் கொண்டது. தென்னிந்தியத் தமிழர்களை தொழிலாளர்களாகக் கொண்ட ஒரு தேயிலைத் தோட்டத்தில் திடீரென்று காலரா நோய் பரவி விடுகிறது. அந்நோயைக் கட்டுப்படுத்த மருத்துவ வசதிகளோ, மருந்தோ இல்லாத அன்றைய நிலையில் ஆங்கிலத் துரையும் அவர் மனைவியும் எப்படிச் சமாளித்து நோயை விரட்டுகிறார்கள் என்பதுதான் கதை. படத்தின் கதாநாயகி பின்னாளில் உலகப் புகழ்பெற்ற நடிகை [[எலிசபெத் டெய்லர்]]. அவர் இப்படத்தில் தமிழ் பேசி நடித்திருக்கிறார். அவர் தனது சமையல்காரரிடம் பேசிய இரண்டு தமிழ் வார்த்தைகள் ''கொண்டு வா, கொண்டு வா'' ''கொண்டு போ, கொண்டு போ''.

"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது