"ஒடிசாவின் நாட்டுப்புற ஆடற்கலைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
=== ருக் மார் நாச்சா (&ச்சாஹீ ந்டனம்) === : இந்த நடனம் ஒடிசாவில் உள்ள மாயுர்பான்ஞ் மாவட்டத்திலும் மற்றும் பலேஸ்வார் மாவடத்தில் உள்ள நீல்கிரியிலும் உருவாகி ஆடப்பட்டு வருகிறது. இதற்கு தற்காப்பு கலை பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த நடனம் போலியான யுத்தகளத்தில் இரு குழுவினர் யுத்தம் செய்வது போல நடன அசைவுகளைக் கொண்டதாகக் காணப்படும். இரு குழுவினரும் தங்கள் கைகளில் ஆயுதங்கள் மற்றும் கேடயங்கள் ஏந்தி வேகமாக எழிலார்ந்த நேர்த்தியான நிலையில் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் தாக்குவதும் தற்காத்துக் கொள்வதும் போல இந்நடனம் அமையும். இதில் குறிப்பிடத் தக்கது இதோடு இணைந்த இசையாகும் இது சிக்கலான தாளம் மற்றும் வேகமான தட்டுதலுக்கு பெயர்பெற்றது. 'மகுரி' - ஒரு இரட்டை நாண் இசைக்கருவி, 'தும்ஸா' - ஒரு அரைக்கோள மேளம் மற்றும் 'சாட்சாடி' - ஒரு குள்ளமான கோள மேளம் ஆகியவை இந்த இசைக்கருவிகளுள் அடங்கும்
==== கோடி புவா ====
இந்த கோடி புவா நடனத்தில் ஆண் நடனமாடுபவர்கள் பெண்கள் போல உடை அணிந்து ஆடுவார்கள். இவர்கள் புரியிலுள்ளபூரியிலுள்ள ராமச்சந்திரதேவா மூலம் கோயிலின் புற எல்லையில் நிறுவப்பட்ட அக்காதஸ் அல்லது உடற்பயிற்சிக் கூடத்தின் மாணவர்கள். இவர்கள் அக்கதாஸ் அமைப்பின் கிளையினர் ஆதலால் இந்த கோடி புவா நடனம் அக்கதா பிலாஸ் (அக்கதாவோடு தொடர்புடைய ஆண் மகன்கள்) என்றும் அறியப்படுகிறது. இதைப் போன்று ஆண்கள் பெண்கள் போல உடை அணிந்து கோடி புவா நடனம் ஆடுவதற்கு நியாயப் படுத்தப் படும் ஒரு காரணம், இறைவனை தொழுவதற்கு என்று பெண்கள் நடனம் ஆடுவதை விரும்பாத வைஷ்ணவ மதத்தை பின்பற்றும் சிலர் இவ்வாறு ஆண்கள் பெண்கள் போல உடை அணிந்து ஆடுவதை அறிமுகப் படுத்தினர். கோடி என்ற வார்த்தைக்கு 'ஒன்று' அல்லது 'ஒற்றை' என்றும் புவா என்பதற்கு 'ஆண் மகன்' என்றும் பொருள் படும். ஆனால் இந்த கோடி புவா நடனத்தில் நடனம் ஆடுபவர்கள் சோடியாகவே ஆடுவார்கள். இந்த நடனம் ஆடுவதற்கு ஆண் குழந்தைகள் ஆறு வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்தம் பதினான்கு வயது வரை பயிற்சி எடுத்துக் கொள்வார்கள், அதன் பிறகு அவர்கள் நடனம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகவோ அல்லது மேடை நாடகக் குழுவில் சேர்ந்து விடுவார்கள். கோடி புவா தற்போது டால்ஸ் என்று அழைக்கப் படும் தொழில் முறை நடனக் குழுவின் ஒரு அங்கமாகச் செயல் படுகிறது. இதை தலைமை தாங்கி நடத்துபவர் குரு என்று அழைக்கப் படுகிறார்.
352

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2931526" இருந்து மீள்விக்கப்பட்டது