ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 93:
 
=== முதல்வர் ===
1991ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜெ. ஜெயலலிதா 1991 சூலை 24ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது அவரின் காலில் [[கே. செங்கோட்டையன்]] விழுந்தார்; அவரைத் தொடர்ந்து பிறரும் விழுந்தனர். அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியது. சட்டசபை இவரைப் புகழ்ந்துரைக்கும் இடமாக மாறியது. ஜெயலலிதா தனது முதலமைச்சர் பணிக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாகப் பெற்றார். இவர் மீதும் அமைச்சர்கள் மீதும் எதிர்கட்சிகள் ஊழல் புகார்களை அடுக்கின.<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல திட்டங்களை தமிழகத்தில் கொண்ட வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்டு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார். 1996ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் எதிர்க்கட்சிகள் இவர் மீது பல வழக்குகளை தொடர்ந்தன.{{cn}}
 
==== மகாமக விபத்து ====
அதேவேளையில் 1992 பிப்ரவரி 18ஆம் நாள் இவர் கும்பகோணம் மகாமகக்குளத்தில் சென்று நீராடியபொழுது ஏற்பட்ட கூட்டநெரிசலில் தர்மசாலா என்ற கட்டிடத்தின் சுவர் இடிந்துவிழுந்து 48பேர் இறந்தார்கள். <ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref>
 
==== வளர்ப்புமகன் திருமணம் ====
ஜெ. ஜெயலலிதா, தன் தோழி [[சசிகலா|சசிகலாவுக்கு]] அக்கா மகனான [[சுதாகரன்]] என்னும் 28 வயது இளைஞரை தன் மகனாகத் தத்தெடுத்தார். அவருக்கு 1995 செப்டம்பரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார். <ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref>
 
== சிறையில் ==
1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரது கட்சி ஆட்சியை இழந்தது. அவர் மீதும் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் தொடக்கப்பட்டன. 1996 திசம்பர் 6ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவப்பா, ஜெயலலிதாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். 1996 திசம்பர் 7ஆம் நாள் ஜெயலலிதா, ஊழல் வழக்கின் மீதான விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் 2529ஆம் எண்கைதியாக அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. 28 நாள்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். நகை அணிவதைத் தவிர்த்தார். சசிகலாவையும் அவர்தம் உறவினர்களையும் தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார்.<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref>
 
== சட்டமன்றப் பொறுப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது