ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 103:
== சிறையில் ==
1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரது கட்சி ஆட்சியை இழந்தது. அவர் மீதும் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் தொடக்கப்பட்டன. 1996 திசம்பர் 6ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவப்பா, ஜெயலலிதாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். 1996 திசம்பர் 7ஆம் நாள் ஜெயலலிதா, ஊழல் வழக்கின் மீதான விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் 2529ஆம் எண்கைதியாக அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. 28 நாள்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். நகை அணிவதைத் தவிர்த்தார். சசிகலாவையும் அவர்தம் உறவினர்களையும் தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார்.<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> ஆனால், ஈராணடு சிறைவாசத்திற்குப் பின்னர் 1999ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியேவந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் வீட்டில் குடியேறினார்.
 
== வழக்குகளும் தீர்ப்புகளும் ==
1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெ.ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெற்றதாக வழக்குகள் தொடங்கப்பட்டன. அவற்றின் மீதான் தீர்ப்புகள் வருமாறு<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref>:
* அதிமுக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மல்லிகா என்பவருக்கு ஊழல்வழக்கு ஒன்றில் 2000 சனவரி 12ஆம் நாள் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
* டான்சி வழக்கில் நீதிபதி எஸ். தங்கராஜ் 2000 சனவரி 13ஆம் நாள் ஜெயலலிதாவை விடுவித்தார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் சிறப்பு நீதிமன்றத்தில் மறுவிசாரணை செய்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
* நிலக்கரி இறக்குமதி வழக்கில் நீதிபதி வி.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவை விடுவித்தார்.
* கொடைக்கானல் 'பிளஸன்ட் ஸ்டே' வழக்கில் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் செல்வகண்பதி, இந்திய ஆட்சிப்பணி அலுவலர் பாண்டே, ஓட்டல் உரிமையாளர்கள் ராகேஷ்மிட்டல், சண்முகம் ஆகியோருக்கு நீதிபதி வி. ராதாகிருஷ்ணன் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தார். இதன் விளைவாக 2000 பிப்ரவரி 2ஆம் நாள் தர்மபுரிக்கு அருகில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயணம்செய்த பேருந்து அதிமுகவினரால் எரிக்கப்பட்டது. அதில் காயத்ரி, கோகிலவாணி, ஹேமலதா என்ற மூன்று மாணவிகள் பேருந்திற்குள்ளேயே கருதி மாண்டனர்.
 
== சட்டமன்றப் பொறுப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது