சல்மா அக்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமைக்காலம்: புது கட்டுரை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

16:32, 14 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

மௌசுமி அக்தர் ஷல்மா, இவர் பங்களாதேஷை சேர்ந்த நாட்டுப்புற பாடகர் ஆவார். 'என்டிவி' இனால் 2006 ம் ஆண்டு நடாத்தப்பட்ட "குளோஸ்அப் 1 டொமகே குயிச்கே பங்களாதேஷ்" எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமடைந்தவர்.

இளமைக்காலம்

இவர் கங்காரம்பூர் எனும் ஊரில் பிறந்தவர்.

இசை வாழ்க்கை

இவர் நான்கு வயதில் தனது குருவான பவுல் ஷாபி மன்டல் என்பவரிடம் இசை பயின்றார். பராம்பரிய இசையுடன் நாட்டுப்புற இசையையும் தனது குருவிடம் பயின்றார். இவர் வாழ்க்கையில் பெரிய மாற்றம் அவரின் 12 வயதில் நிகழ்ந்தது. ' என்ரீவி' 2006 இல் நிகழ்த்திய "குளோசப் 1" (சீசன் 2 ) எனும் இசை நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் ஒருலட்சம் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இவர் ஏனைய பெங்காலி நாட்டுப்புற பாடல்களுடன் லலோன் கீதி பாடல்களையும் பாடினார். இவர் நடுத்தர பாரம்பரிய மற்றும் நவீன பாடல்களையும் பாடக்கூடியவர். 2011 இல் இருந்து இப்போதுவரை உஸ்ராட் சஞ்சிப் தேசிங் என்பவரிடமும் கல்வி பயில்கின்றார். இவர் தனியே 11 ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் 30 கலப்பு ஆல்பங்களிலும பணியாற்றியுள்ளார். இவரின் முதலாவது தனி ஆல்பம் "பாணியா பொந்து " என்பதாகும். தனிப்பட்ட வாழ்க்கை

இவர் 2010 இல் சிபிலி சாதிக் என்பவரை திருமணம் செய்தார். இவரின் கணவர் தினச்பூர் -6 எனும் தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது சிறந்த தொழிலதிபரும் ஆவார். 2012 இல் இவருக்கு முதலாவது பெண் குழ்தை பிறந்தது. பெயர் சினேகா. 2016 நொவெம்பர் மாதத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார். பின்னர் இவர் பிரிட்டனில் இருந்த் குடிபெயர்ந்த சனௌல்லா சகர் என்பவரை 31. டிசம்பர். 2018 இல் மறுமணம் புரிந்தார். இதன் மூலம் தனது இரண்டாவது மகளான சபியா நூர் என்பவரை 2019 டிசம்பரில் பெற்றெடுத்தார்.

விருதுகள்

வச்சாஸ் - சிறந்த பெண் பாடகி

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மா_அக்தர்&oldid=2932649" இலிருந்து மீள்விக்கப்பட்டது