டாண்டியா ராஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ராஸ் அல்லது டாண்டியா ராஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

14:50, 18 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

ராஸ் அல்லது டாண்டியா ராஸ் என்பது சமூக – மத உறவு கொண்ட நாட்டுபுற நடனம் ஆகும். இது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் தோன்றியதாகும் விசேசமாக நவராத்திரி சமயத்தில் ஆடப்படும். இந்த இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மார்வார் பகுதியிலும் கூட ஆடப்படுகிறது.


                            Contents

·       1சொல்பிறப்பியஒ

·       2ராஸின் கலைவடிவங்கள்

·       3வடிவமைப்பு

·       4மேற்கோள்கள்

·       5.வெளி இணைப்புகள்

Contents

= = சொற்பிறப்பியல் = =Contents

ராஸ் என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் உள்ள “ராசா” என்ற வார்த்தையில் இருந்து உருவானது. இது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளோடு தொடர்புடைய ஒரு தெய்வீக வார்த்தையாகும். கபிலா வாத்ஸையவன் தெய்வீக வார்த்தை என்பது இந்திய கலைகளின் ஒற்றுமைக்கு ஒரு அடிப்படை என்று வாதாடுகிறார்.

= = ராஸின் கலை வடிவங்கள் = =

டாண்டியா ராஸ், கோப்குனாதன் சொலாங்க ராஸ் மற்றும் மெர் டாண்டியா ராஸ் போன்றவைகள் ராஸ் நடனத்தின் பொதுவான கலை வடிவங்கள் ஆகும். சௌராஷ்டிராவில் ராஸ் என்பது ஆடவர்களால் ஆடப்படுவது பெண்கள் ஆடுவது ராஸ்டா என்று அழைக்கப் படுகிறது. ராஸ் வடிவத்தில் நடன கூறுநிலை முக்கிய பங்கு வகிக்கும் ஆனால் ராஸ்டா வடிவத்தில் இசை முக்கிய பங்கு வகிக்கும்.

= = வடிவமைப்பு = =

ஆண்களும் பெண்களும் டாண்டியா ராஸ் நடனத்தை பாரம்பரிய முறையில் ஆணும் பெண்ணுமாக இணைந்து ஆடுவார்கள் எனவே இந்த நடனக் குழுவில் இரட்டைப்படையில்தான் குழுவினரின் எண்ணிக்கை இருக்க வேண்டும். பொதுவாக இரண்டு வரிசையில் கலைஞர்கள் ஒருவரை ஒருவரின் முகம் பார்த்து நின்று ஆடுவார்கள்.

பொதுவாக இந்த வரிசையானது கடிகாரமுள் திசையில் இயங்கும் ஒவ்வொருவரும் தன் இணையாயிருப்பவரின் கையில் உள்ள கோலை அடிப்பதற்காக ஒரு அடி முன் வைப்பார் பிறகு இரண்டாம் நபரை நோக்கி செல்வார். வரிசையின் கடைசியில் ஒவ்வொருவரும் திரும்பி தங்களுக்கு எதிராக உள்ள வரிசையில் இணைந்து கொள்வார் எனவே இந்த நடன இயக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இங்கு இசை மிக மெதுவாக தொடங்கும். இந்த இசையானது எட்டு முறை அடிக்கும் இசை சுழற்சி கஹெர்வா என்று அழைக்கப் படுகிறது இது கீழ் கண்ட முறையில் இசைக்கப் பட்டு நடனம் ஆடப் படுகிறது. முதல் அடியில் கலைஞர்கள் தங்கள் வலப்பக்கம் திரும்பி தங்கள் கோல்களை அடித்து பின்னர் வலப்பக்கம் திரும்பி தங்கள் இணையின் கோலை அடிப்பார்கள் பின்னர் தங்களின் இடப்பக்கம் கோலில் மறுபடியும் அடிப்பார்கள். மறுபடியும் அனைவரும் இடப்பக்கம் திரும்பி தங்கள் கோல்களை தாங்களே அடித்து பின் திரும்பி தங்கள் இணையின் வலப்பக்க கோலை மறுபடியும் அடிப்பார்கள் பின்னர் புதிய இணையுடன் சேருவதற்கு முன்பாக இரண்டு முறை இடம் மாறுவார்கள்.

= = இணைப்புகள் = =

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாண்டியா_ராஸ்&oldid=2934471" இலிருந்து மீள்விக்கப்பட்டது