"மூத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
மூத் கடவுள் தலையில் இரட்டை மணிமகுடம், [[கழுகு|கழுகை]] தாங்கிய உலகின் சக்தியாக சித்தரிக்கப்படுகிறார். மூத் கடவுளின் வழிபாடு உச்சநிலையில் இருக்கையில், எகிப்தின் [[பார்வோன்]]கள், மூத் கடவுளின் வழிபாட்டை ஆதரித்தனர். [[ஒபெத் திருவிழா]] போன்ற முக்கிய விழாக்களின் போது மூத் தாய்க் கடவுளின் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மூத் தெய்வத்திற்கான கோயில், [[தீபை]] அருகே உள்ள [[கர்னாக்]]கில் உள்ளது.
 
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தில்]] (கிமு 2686 – கிமு 2181) [[அமூன்]] கடவுளின் துணையாக மூத் தெய்வம் வழிபடபட்டது. [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] (கிமு 1550 – 1077) ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்ச]] [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்]] ஆட்சியில் கோயில்களில் [[அமூன்]], '''மூத்''' தெய்வங்களுடன் [[இரண்டாம் இராமேசஸ்ராமேசஸ்]] சிற்பங்கள் நிறுவப்பட்டது. [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்|[[பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தில்]] (கிமு 664 - கிமு 332) மூத் தெய்வத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, [[மேல் எகிப்து]] பகுதியில் உள்ள [[தீபை]] நகரத்தின் காவல் தெய்வம் என்ற நிலைக்குச் சென்றது.<ref>Wilkinson, Richard H. (2003). ''The Complete Gods and Goddesses of Ancient Egypt''. Thames & Hudson. pp. 153–155, 169</ref>
 
==இதனையும் காண்க==
* [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2937720" இருந்து மீள்விக்கப்பட்டது