ஜெமினி கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
 
== பிறப்பு ==
தமிழகத்தின் [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையில்]] 16 நவம்பர் 1920இல் ராமசாமி ஐயர், கங்கம்மாள் இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். இவரது இயற்பெயர் கணபதிசுப்ரமணியன் சர்மா என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது. <ref name ="Gemini">ரத்தினம் ராமசாமி, ஜெமினி கணேசன் 100!, தினமணி 2019 திசம்பர் 01</ref>
 
== வளர்ப்பு ==
ரத்னகண்ணு ராமசாமி ஐயா் கணேசன் என்பதன் முழுபெயர் கொண்ட ஜெமினிகணேசன், தனது 10ஆவது வயதில் தன் தந்தையை இழந்து தனது சித்தப்பா நாராயணன் அரவணைப்பில் வளர்ந்தார். <ref name ="Gemini"/>
 
==படிப்பு==
கணேசன் [[மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை]]-யில் பயின்று வேதியியலில் அறிவியல் இளவர் (B.Sc. Chemistry) பட்டம் பெற்றார்.<ref name = "geminiGemini"/>
 
== குடும்பம் ==
ஜெமினி கணேசன், தன் வீட்டினர் செய்த ஏற்பாட்டின்படி பாப்ஜி என்ற அலமேலு என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி நான்கு பெண்மக்கள் பிறந்தனர்.
 
பின்னர் தன்னோடு திரைப்படங்களில் நடித்த [[புஷ்பவல்லி]] என்பவரோடு வாழ்ந்தார். இவர்களுக்கு [[ரேகா (நடிகை)|பானுரோகா]] (1954 அக்டோபர் 10]], ராதா என்னும் இரண்டு பெண்மக்கள் பிறந்தனர். <ref name ="jeeva">[http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6213 பா. ஜீவசுந்தரி, செல்லுலாய்ட் பெண்கள்:ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி புஷ்பவல்லி</ref>
 
அதன் பின்னர் [[மனம்போல் மாங்கல்யம்]] என்ற படத்தில் தன்னுடன் நடித்த [[சாவித்திரி (நடிகை)| சாவித்திரி]] என்ற நடிகையோடு வாழ்ந்தார். இவர்களுக்கு விஜயசாமுண்டீஸ்வரி (1958) என்ற மகளும் சதீஷ்கிருஷ்ணா (1965) என்ற மகனும் பிறந்தனர். <ref name = "geminiGemini"/>
 
== கல்லூரி ஆசிரியர் ==
கல்லூரிக்கல்வியை முடித்த கணேசன் சென்னை கிருத்துவ கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.<ref name = "geminiGemini"/>
 
== திரையுலகில் ==
=== தொடக்க காலப்பணி ===
பின்னர், ஜெமினி ஸ்டூடியோவில் புதுமுகங்களைத் தேர்வுசெய்யும் கேஸ்டிங் டைரக்டராகப் பணியாற்றினார். <ref name = "geminiGemini"/>
 
=== நடிகர் ===
==== முதல் படம் ====
1947ஆம் ஆண்டு [[மிஸ்.மாலினி]] என்னும் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். அதில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். 1952ஆம் ஆண்டின் வெளியீடான [[தாயுள்ளம்]] என்ற படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாகவும் எம்.வி.ராஜம்மா கதாநாயகியாகவும் நடித்தனர். அப்படத்தில் ஜெமினி கணேசன் வில்லன் வேடம் ஏற்றிருந்தார்.
1947ஆம் ஆண்டு [[மிஸ்.மாலினி]] என்னும் திரைப்படத்தில் முதன்முறையாக சிறிய வேடம் ஒன்றில் நடித்த ஜெமினி கணேசன், தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
<br>
1953ஆம் ஆண்டு வெளிவந்த [[பெண்]] என்ற படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவர் ஜோடியாக [[அஞ்சலி தேவி]] நடித்திருந்தார். வைஜயந்தி மாலாவும் நடித்த இப்படத்தில், வீணை வித்வானாகவும், புதுமை இயக்குனராகப் புகழ் பெற்றவருமான [[எஸ்.பாலச்சந்தர்]] ஜெமினி கணேசனின் நண்பனாக வேடம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே ஆண்டில் வெளிவந்த [[மனம்போல மாங்கல்யம்]] என்ற படத்தில் அவர் முதன்முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின்போதுதான், இதில் தன்னுடன் நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]]யை அவர் மணந்து கொண்டார்.
<br>
தொடர்ந்து நடித்த [[கணவனே கண்கண்ட தெய்வம்]], [[மிஸ்ஸியம்மா]] போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.
<br>
காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது [[வஞ்சிக்கோட்டை வாலிபன்]] என்ற திரைப்படம். இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புல்லரிக்க வைப்பதாக அமைந்த ஒன்று.
 
==== பெயர்க்காரணம்====
=== இயக்குனர்களின் நாயகன் ===
ஆரம்ப காலப் படங்களில் அவரது பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. "பராசக்தி' மூலமாக தமிழ்த்திரையுலகிற்கு வந்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே அழைக்கப்பட்டார். எனவே, பெயர்க்குழப்பம் ஏற்படுவதை தவிப்பதற்காக, தனது பெயருடன் தான் திரையுலகில் நுழைந்த ஜெமினி நிறுவனத்தின் பெயரை முன்பகுதியில் இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.<ref name ="Gemini"/>
 
==== வில்லன் ====
ஜெமினி கணேசன் இரண்டு படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவை:
 
1952-இல் வெளியான "தாயுள்ளம்' என்ற படத்தில் ஜெமினி கணேசன் வில்லனாகவும் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாகவும் நடித்தனர். பிற்காலத்தில் ஆர்.எஸ்.மனோகர் வில்லன் ஆகவும் ஜெமினி கதாநாயகன் ஆகவும் நிலைபெற்று விட்டனர். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் ஜெமினி கணேசன் இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார்.<ref name ="Gemini"/>
 
==== கதாநாயகன் ====
கதாநாயகன் வேடத்தில் ஜெமினி நடித்த முதல் படம் 1953-ஆம் ஆண்டு வெளியான "பெண்'. இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார். 1953-ஆம் ஆண்டில் வெளிவந்த "மனம்போல மாங்கல்யம்' படத்தில் முதன்முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். "வஞ்சிக் கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் அவர் ஒரு சாகச நாயகனாக நடித்தார். "நான் அவனில்லை' படத்தில் ஒன்பது தோற்றங்களில் ஜெமினி நடித்துள்ளார்.
"முகராசி" என்ற படத்தில் மட்டுமே எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம் "ஆஷாதீப'" என்கிற மலையாள படம். தமிழில் "ஆசைமகன்' என்ற பெயரில் வெளிவந்தது. <ref name ="Gemini"/> தொடர்ந்து நடித்த [[கணவனே கண்கண்ட தெய்வம்]], [[மிஸ்ஸியம்மா]] போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன.
 
=== இயக்குநர் ===
ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் "இதய மலர்' மட்டுமே. தாமரை மணாளன் இப்படத்தை இணைந்து இயக்கியிருந்தார். <ref name ="Gemini"/>
 
=== பாடகர் ===
"இதயமலர்' திரைப்படத்தில் "லவ் ஆல்' என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.<ref name ="Gemini"/>
=== தயாரிப்பாளர் ===
சொந்தமாக ஜெமினி தயாரித்த ஒரே படம் "நான் அவனில்லை' மட்டுமே. இது வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். <ref name ="Gemini"/>
 
== தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ==
ஜெமினிக்கு இந்தி மொழி மிக நன்றாகத தெரியும். 1980-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான "ஹம்லோக்' சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் ஜெமினி தமிழில் முன் கதைச்சுருக்கம் தொகுத்தளித்தார். <ref name ="Gemini"/>
 
 
== சிறப்பு ==
ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில், [[கே.எஸ்.கோபாலகிருட்டிணன்|கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்]], [[சிறீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]], [[கே.பாலச்சந்தர்]], பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.
 
வரி 69 ⟶ 89:
 
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற [[சிவாஜி கணேசன்]] முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.
 
[[எம்.ஜி.ஆர்]] உடன் ஜெமினி கணேசன் "முகராசி" என்ற ஒரே படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்.
 
தமக்குப் பின்னர் திரைக்கு வந்த [[ஜெய்சங்கர்]], [[ஏ. வி. எம். ராஜன்]], [[முத்துராமன்]] ஆகியோருடனும் ஜெமினி கணேசன் பல படங்களில் இணைந்து நடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெமினி_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது