பாரதிபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''பாரதிபாலன்''' (03-04-1965) தமிழ்ப் புதின எழுத்தாளரும் சிறுகதை, கட்டுரை எழுத்தாளருமாவார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பனியாற்றும் பாரதிபாலன் தற்காலத் தமிழ்ப் படைப்புலகில் குறிப்பிடதக்க பங்களிப்பு செய்துள்ளார். 1985 முதல் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயனன், சி,சு செல்லப்பா போன்றவர்களின் படைப்புகளில் உந்தப்பட்டு எழுத வந்த பாரதி பாலன்,[[மதுரை தியாகராசர் கல்லூரி]]யில் படிக்கின்ற காலத்திலே ‘வைகைத்தென்றல்’ என்ற மாணவர் இதழினை நடத்தியவர், அந்த இதழினை அப்போதைய மேலவைத்தலைவர் ம.போ.சிவஞானம் பாராட்டியுள்ளார், [[செம்மலர்]], [[தாமரை (இதழ்)]], [[கணையாழி (இதழ்)|கணையாழி ]]மற்றும் [[தாய் (இதழ்)|தாய் (இதழ்)களில்]] எழுதத்தொடங்கி தற்பொழுது அனைத்து இதழ்களிலும் எழுதி வரும் பாரதி பாலன் 2018 இல் தமிழ்நாடு அரசின் மகாகவி பாரதியார் விருது பெற்றவராவார்.<ref name="பாரதியார் விருது">https://www.dinamani.com/latest-news/2018/jan/16/-2845493.html</ref>
 
==வாழ்க்கை குறிப்பு==
பாரதிபாலன் தேனிமாவட்டம் சீலையம்பட்டிக் கிராமத்தில் 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். தொடக்கக்கல்வியைச் சீலையம்பட்டியிலும், மேல்நிலைக்கல்வியைச் சின்னமனூரிலும், உயர்கல்வியை மதுரை தியாகராசர் கல்லூரியிலும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் முடித்தவர். இவர் [[முதுகலை]] தமிழ், முதுகலை [[இதழியல்]] மற்றும் தகவல் தொடர்பியல் கல்வியியல் பட்டயம், முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். இவரது மனைவி முனைவர். ஆர்.மகேஸ்வரி; பாரதி பாலன் மகன், மகளோடு 1987இல் இருந்து சென்னையில் வசித்து வருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/பாரதிபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது