முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இராமர் கோயில்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முடிகொண்டான் ராமர் கோயில் புதிய பதிவு தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

02:39, 27 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

முடிகொண்டான் ராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டானில் உள்ளது. [1]

மூலவர்

ராமரின் வருகையைப் பற்றி பரதரிடம் சொல்வதற்காக ஆஞ்சநேயர் சென்றுவிட்ட காரணத்தால் இங்கு மூலவராக ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.ராமர் கோதண்டராமராக கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவருக்கு வலப்புறம் சீதையும், இடப்புறம் லட்சுமணனும் உள்ளனர். [1]

விழாக்கள்

புரட்டாசி சனிக்கிழமை, ராம நவமி போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்