"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
://நாமே முழுத்திட்டமிட்டு போட்டிகளை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என நினைக்கிறேன்// ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? நாமே பல போட்டிகளை நடத்தி உள்ளோமே? ஊரடங்கு காலத்தில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் போட்டிக்கு வாருங்கள் என்று அழைப்பது கூட மேட்டிமைத் தனமாகப் பார்க்கப்படலாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:27, 31 மார்ச் 2020 (UTC)
 
:தொடர்ந்து போட்டி மேல் போட்டி நடத்துவது ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பார்களைக் களைப்படயச் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் விக்கி உலகில் பல போட்டிகளை நடத்துகிறார்கள். இதில் நாம் சில போட்டிகளில் தெரிந்தே ஒதுங்கி இருப்பதும், அவ்வளவு முனைப்பாக பங்கு கொள்ளாமல் இருப்பதும் நல்லதே. எவ்வளவு வளமான நிலமானாலும் 12 மாதமும் உழவு செய்ய முடியாது. விக்கி சமூகம் புத்தூக்கம் கொள்ள ஓய்வும் தேவை. அதை விட முக்கியம், விக்கிப்பீடியா என்றாலே போட்டி, பரிசு என்று எண்ணம் ஏற்பட்டு விடாமல் இயல்பான பங்களிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். அதே போல், போட்டி வைத்து குறிப்பிட்ட தலைப்புகளை மட்டும் ஊக்குவிக்காமல் பொதுவான ஆர்வத்தின் அடிப்படையில் செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். ஆண்டின் ஆறு மாதங்களாக இப்படி இயல்பான பங்களிப்புகளை ஊக்குவிப்பது நன்று. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:31, 31 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2942840" இருந்து மீள்விக்கப்பட்டது