விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 186:
 
---- க.ய. ஆனந்தி23யமுனைதுறைவன்
 
 
 
 
 
பெண் தெய்வ வழிபாடு-பிரியங்கா
 
 
 
தமிழகத்தில் அம்மன் வழிபாட்டு முறையில்,ஆண் துணையின்றி தனியாக வீற்றிருக்கும் அம்மனை தாயோடு ஒப்பிட்டு வழிபடும் முறை நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.கவிஞர் காளிதாசனுக்கு கவியருள் வழங்கிய “காளியம்மன்” குறித்து தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மக்களைக் காப்பாற்றுவதற்காக ஆயுதம் ஏந்தி மிகுந்த சினம் கொண்டவையாக பெரும்பாலான அம்மன் கோவில்கள் காட்சியளிக்கின்றன.ஒன்பதாம் நூற்றாண்டில் ஆணாதிக்க உணர்வின் வெளிப்பாடாக ஆண் மைய வழிபாடலை முன்னிறுத்த பெரும்பாலான தாய் வழிபாட்டு முறைகள் அழிக்கப்பட்டு விட்டன.
தன்னைக் கொலை செய்த கணவனை பழி வாங்கிய நீலியினை நீலிஅம்மனாகவும்,வறுமையின் அடையாளமான மூதேவியினை வழிபடும் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.தமிழ்நாட்டின் வடப்பகுதியில் “ஆயி” என்னும் சொல் வழிபாட்டுச் சொற்றொடராக இருந்து வருகிறது.
மேரி அன்னை வழிபாடு:
கத்தோலிக்க மதம் தமிழகத்தில் கி.பி 16 ஆம் நூற்றாண்டு கால் கொண்டது.மத வேறுபாடின்றி இன்றும் வேளாங்கண்ணிக்கு சென்று பெண்கள் மாதாவினை வழிபடும் முறை தமிழகத்தில் நிலவுகிறது.இதற்கு அடித்தளமிட்டவர் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாமுனிவர்.இவர் திருச்சி மாவட்டம் ஏலாக்குறிச்சியில் தூய மரியாள் கோவிலை நிறுவினார்.இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் தான் கட்டிய கோவிலில் தாய் மரியாளுக்கு “பெரியநாயகி”என்று பெயரிட்டார்.அன்னையின் காவலில் உள்ள ஊர் என்னும் பொருள் படும்படி அவர் அமைத்த குடியிருப்பிற்கு “திருக்காவலூர்” எனப் பெயரிட்டார்.
சமண தெய்வங்களில் பெண் வழிபாடு:
நெல்லை குமரி மாவட்டங்களில் வழிபடும் இசக்கியம்மன் ஒரு சமணத் தெய்வமாகும்.13 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு சமண மதம் வழக்கொழிந்து போனாலும் சமணப் புராணங்களில் குறிப்பிடப்படும் இசக்கியம்மன் மட்டும் அதே பெயரிலும் பகவதி அம்மன் என்ற பெயரிலும் இன்றளவிலும் பல சிற்றூர்களில் வழிபாட்டு தெய்வமாக இருந்து வருகிறது.தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வழிபடும் பொன்னியம்மனும் “ஜ்வாலா மாலினி” என்ற சமண சமயப் பெண் தெய்வமே ஆகும்.
 
 
 
தாய் தெய்வ வழிபாட்டுக்கதைகள்:
பெரும்பாலான தாய் வழிபாட்டுக் கதைகளில் அம்மன் ஆயுதங்களை ஏந்தி எருமைத்தலை அரக்கனைக் கொன்றொழிப்பவையாக புனையப்பட்டிருக்கும்.ஊரின் நடுப்பகுதியில் பெரும்பாலும் இக்கோவில்கள் அமைந்திருக்கும்.மாரி அம்மன் என்னும் சொற்றொடரில் “மாரி” என்ற சொல்லுக்கு மழை என்று பொருள்.வழிபாடு இல்லாத காலத்தில் இத்தெய்வம் சினங்கொண்டு மழையினை நிறுத்திவிட்டு வெம்மை நோயினைப் பரப்பி விடும் என்று நம்பப்படுகிறது.இன்றும் அம்மை நோயோடு மாரி அம்மனை தொடர்புப்படுத்துதல் இதன் அடிப்படையில் தான்.மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் கால் நடைகளுக்கும் கோமாரி நோயினை இத்தெய்வம் வழங்கித் தண்டிக்கும் என்னும் நம்பிக்கையும் உள்ளது.
இருட்டிலும் தன்னை வழிபடும் மக்களின் கனவில் வாழும் 'வனப் பேச்சி' அம்மனுக்கு கோழி போன்ற இரத்தப் பலிகள் படைக்கப்படுகிறது.
 
பத்தினியம்மன்,தீப்பாய்ச்சி அம்மன் போன்ற தெய்வங்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிய பெண் தெய்வங்கள்.
கோவையில் அமைந்திருக்கும் மாசானியம்மன் ,மயானத்தில் எலும்புக்கூடுகளை வைத்து வழிபடும் “மயானக் கொள்ளை” வழிபாட்டு முறையைச் சார்ந்தது.
கன்னித் தெய்வ வழிபாட்டின் பிண்ணனியில், பூப்பெய்திய பிறகு இளவயதிலேயே இறந்துப்போன பெண்கள் கன்னித் தெய்வமாகின்றன.இவற்றிற்கு படைக்கப்படும் சிற்றிடை கன்னிச் சிற்றாடை என அழைக்கப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு இளவயதில் இறந்து போன பெண்கள் குடும்பத் தெய்வங்களாகின்றன. “மாலையம்மன்” வழிபாட்டு முறை இதிலிருந்து வருகிறது.”மணமாலை சூடியவள்” என்ற பொருளினை உணர்த்துகிறது.
பாடை எழுப்பப்பட்ட தெய்வங்கள் என்று பேச்சு வழக்கில் குறிப்பிடப்படும் தெய்வங்களும் உண்டு.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இவ்வழிபாடு பெருமளவு காணப்படுகிறது.பூசத்தாய் என்கிற பெண் தன் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் கைக்குழந்தையுடன் தனது ஆத்தா வீட்டிற்கு சென்றுவிடுகிறாள்.அவளது கணவர்‌ இரண்டாம் திருமணம் செய்து கொண்ட விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்கிறாள்.அதனால் அவளுக்கு பாடை அமைத்து வழிபாடு செய்கின்றனர்.இதே போல பாடை எழுப்பின சாமி “திருமலை ஆச்சி” கதையிலும் திருமலையை வயதான முதியவர் ஒருவருக்கு மணமுடித்த விரக்தியில் அவள் தற்கொலை செய்து கொண்டதால் அவளுக்கு பாடை எழுப்பப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
அருப்புக்கோட்டை அருகில் உள்ள புலியூரான் கிராமத்தில் வருடந்தோறும் ஆலமரத்திற்கு அடியில் கண்டாங்கிச் சேலை அணிந்து ஒரு பெண் படுத்திருப்பது போல இருக்கும் சிலையில் இருந்து சற்றுத் தொலைவில் நின்று சோறும் முட்டையும் கலந்து உருண்டையாக உருட்டி சிலை மீது எறிவார்கள்.இதற்கு பிண்ணனியில் பொன்னுருளாயி என்னும் கர்பவதியான பெண் தன் கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதால் தன் சொந்த ஊரை விட்டு தப்பி வேறு ஊர் போகும் வழியில் அந்த ஆலமரத்தின் அடியில் ஓய்வெடுப்பதற்காக அமர்ந்திருந்ததாகவும்,அந்தக் களைப்பில் தூங்கிய அவள் பின் எழுந்திருக்கவே இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
பாளையங்கோட்டையில் கொங்கந்தான் கிராமத்தில் வழிபடும் மணிமுத்தம்மாளும்,விருதுநகர் மாவட்டம் வத்திராயிப்புப் பகுதியில் வழிபடும் “சீனியம்மாள்” கதையின் பிண்ணியிலும் ஆண்களின் சந்தேகத்தினால் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட இரத்தமும் சதையும் கொண்ட பெண்களின் கதைப் பிண்ணணியினைக் கொண்டிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் நல்லுக்குறிச்சி கிராமத்தில் அரியநாச்சி என்னும் பெண் தெய்வ வழிபாட்டு முறை இருந்து வருகிறது.இதன் பிண்ணனியில் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணும் பிற்படுத்தப்பட்ட ஆணும் காதலித்து வந்த நிலையில் ஆண் வீட்டில் முதலில் திருமணத்திற்கு சம்மதித்து பின் அந்த பெண்ணை கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.அவள் இறந்ததால் அந்த ஆணும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால் அந்த ஆண் வீட்டார் அந்த பெண்ணை தெய்வமாக்கிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
இதைப் போல நூற்றுக்கணக்கான பெண் தெய்வ வழிபாட்டுக் கதைகள் பல்வேறு பரிமாணங்களில் தமிழகமெங்கும் நிறைந்து காணப்படுகிறது.
பெண் தெய்வமாக்கப்பட்டதன் பிண்ணனி:
மேலே குறிப்பிட்ட பெண் தெய்வக் கதைகளின் பிண்ணனி பெரும்பாலும் பெண் துயர் பாடுவதாகவே அமைந்திருக்கிறது.திருமணமான பெண்கள் தன் கணவராலும்,காதலிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்தாராலும்,தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதியினராலும் பெரும் இன்னல்களை அனுபவித்துள்ளனர்.
அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களது துயரினை கண்டுகொள்ளாதவர்கள் அவர்கள் இறந்த பின்னர் அவர்களை தெய்வமாக்கியதன் பிண்ணனியில் பெரும் ஆற்றாமை பொதிந்துள்ளது.
இன்றளவிலும் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களோடு பெருமளவு பெண் வழிப்பாட்டுக் கதைகள் பொருந்திப்போகின்றன.
அதற்கு முக்கியக் காரணம் ஆதிக்க உணர்வு மிக்க ஆண்கள் கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்காமல் இன்றளவிலும் ஆதிக்க உணர்வில் இருந்து இம்மியளவிலும் குறையாமல்,பெண்களின் மேல் உடல் அளவிலும்,மனதளவிலும் வன்முறையினைப் பிரயோகிக்கிறார்கள்.
பெண் தெய்வ வழிபாட்டுக் கதைகளில் மிகவும் அடிப்படையாக நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்று,பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே.மேலும் ஆணாதிக்க சிந்தனையையும் சாதி உணர்வினையும் பெண்களுக்கு கடத்தாமல்,இயல்பாக பாலினப் பாகுபாடின்றி பெண் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும் என்பதேயாகும்.
ஆதார நூல்கள்
1.தெய்வம் என்பதோர்-தொ.பரமசிவம்
2.தெய்வமே சாட்சி-ச.தமிழ்ச்செல்வன்
 
== கருவி==