விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE Mahalingam VNRஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 190:
<s>கட்டுரைகளைப் பதிவு செய்யும் கருவி இன்னும் உருவாக்கப்படவில்லை. எனவே அதுவரை அதற்கான [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020/கட்டுரைகள்|இந்தப்பக்கத்தில்]] பதிவு செய்து கொள்ளலாம். மறக்காமல் {{template|விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020}} என்ற வார்ப்புருவை கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் இணைத்துவிடவும்.</s>
:: கருவி வேலை செய்கிறது. எனவே மேற்கண்ட பக்கத்தில் இணைத்த கட்டுரைகளை கருவியில் ஏற்றிக்கொள்ளலாம் நன்றி.--[[பயனர்:Parvathisri|&#32;பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 16:19, 14 பெப்ரவரி 2020 (UTC)
 
[[ பயனர்:க.ய.ஆனந்தியமுனைதுறைவன் ]]
இலக்கியம் சொல்லும் பாலின வரலாறு
 
அழைக்கும் சொற்கள் அல்லது முறை:
தமிழ் இலக்கியத்தில் அலி, பேடி, இடமி, இப்பந்தி, கிலிபம், சண்டகம், கோஷா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஹிஜிரா அரபு மொழியில் அரவாணிகளைக் குறிப்பதற்கான சொல்லாக முக்கானத்துன் உள்ளது. ஆணாகப்பிறந்து தன்னை பெண்ணாக பாவிக்கும் முஸ்லிம் நம்பிக்கை கொண்ட மூன்றாம் பாலினமாக கருதமுடியும். இது ஹனித், ஹன்த என்று அழைக்கப்படுகிறது.
பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் முக்கானத்துன் என்பதற்கு பதிலாக ஹிஜ்ரா என்ற உருதுச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
 
வங்காள மொழியில் ஹிஜிரா என்று சொல்லும், மத்தியப்பிரதேசகத்தில் கின்னர் என்று அழைக்கப்படுகிறார்கள். கின்னர் என்றால் இரண்டு கெட்டான் என்ற அர்த்தம். கின்னர் என்பது ஹிந்தி வழக்கில் சாக்கா என்று அழைக்கப்படுகிறது. தெலுங்கு மொழியில் தொம்மதிவாலு, கொஞ்சவாலு, கோஜா என்றும் கன்னடம் பேசும் பகுதிகளில் கோதி என்று அழைக்கப்படுகிறார்கள். கோதி என்றால் குரங்கு என்ற அர்த்தம் உண்டு. குரங்கு ஓரிடத்தில் நிலையாக அங்கும் மிங்கும் அலைந்து கொண்டிருக்கும். கொல்கத்தாவில் துரணி என்றும், கேரளத்தில் மேனகா என்றும், நேபாளத்தில் மெடி என்றும் பாகிஸ்தானில் ஜெனனா என்றும் அழைக்கப்படுகின்றனர். குஜராத்தில் பாவையா என்றும், ஓமன் நாட்டில் சனித் என்றும், அழைக்கப்படுகிறார்கள். உருது, பஞ்சாபி மொழியில் குஸ்ரா, ஜன்ஹா என்றும் க்வாஜாசிரா என்றும், நபும்சகம் என சமஸ்கிருதத்திலும் ;ஆங்கிலத்தில் யானக், ஹெர்மாபுரோடைட், இம்போடன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவ மதத்தில் அன்னகர் என்ற சொல் அரவாணிகளைக்குறிப்பிடுகிறது.
இவற்றில் மும்பை, தில்லி போன்ற மாநிலங்களில் அரவாணிகளை 7 வகை பிரிவுகளாக பிரித்துள்ளனர். ப+லான்வாலி, லாலன்வாலி, புல்லாக்வாலி, டோங்கரிவாலி, லஸ்கர்வாலி, சகலக்வாலி, பேடி, பஜார் எனவும் இவர்களின் தலைவராக நாயக் என்ற தலைவர்கள் இருக்கிறார்கள்.
 
"இலக்கியத்தில் சான்றுகள் "
 
தமிழின் முதல் தத்துவநூல் எனப் போற்றப்படுகின்ற
நீலகேசி, திருநங்கையர்களின் துன்பங்களை பற்றி இவ்வாறு கூறுகிறது.
 
“பேடி வேதனை பெரி
தோடி ய+ரு மாதலாற்
சேடி யாடு வன்மையிற்
கூடியாவதில்லை”
என்கிறது அப்பாடல்.
இதற்கு முன்னால் ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின் உருவான சைவ, வைணவ பக்தி இலக்கியப் பாடல்கள் இறைவன் ஆண், பெண், அலி என மூன்று பாலினமாக பார்க்கப்படுவதை கூறுகிறது.
இதனை வலியுறுத்தி திருவாசம்
“ பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க”
என்கிறது.
 
இலக்கண நூல்களில் திருநங்கைகள்
இலக்கண நூல்களை ஆய்வு மேற்கொள்ளும்போது அதில் திருநங்கைகள் பற்றி பல நிகண்டுகள் விளக்கம் தருகின்றன.
 
“ பேடி இலக்கணம் பேசுங்காலை
நச்சுப் பேகலும், நல்லுரை ஓர்தலும்
அச்சு மாறியும், ஆண் பெண் ஆகியும்
கைத்தலம் ஒன்றைக் கடுக வீசியும்,
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தலும்
விலங்கி மதித்தும் விழிவேறு ஆகியும்,
துளங்கிக் தூங்கிச் சுழன்று துணிந்தும்,
நாக்கு நாணியும், நடம்பல பயின்றும்,
பக்கம் பார்த்;தும், பங்கி திருத்தியும்,
காரணம் இன்றிக் கதம்பல கொண்டும்
வார் அணி கொங்கையை வலிய நலிந்து
இரங்கியும், அழுதும், அயர்ந்தும், அருவருந்தும்,
குரங்கியும், கோடியும், கோதுகள் செய்தும்,
மருங்கில் பாணியை வைத்தும், வாங்கியும்
இரங்கிப் பேசியும், எல்லேல் என்றும்
இன்னவை பிறவும் இயற்றுதல் இயல்பே”
 
எனக்கூறியுள்ளது தொல்காப்பியம்.
தொல்காப்பியம் பார்வையில்
 
“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் தத்தமக்கிலவே
உயர்திணை மருங்கில் பால்பிரிந் திசைக்கும்”
எனக் கூறுகிறது.
மேலும் பெண் தன்மை மிகுந்தால் பெண்பாலிலேயே அழைக்கவேண்டும் என்றும் , பெண்ணாக இருந்தும் ஆண்தன்மை மிகுதியாக இருந்தால் ஆண்பால் வினைமுடிவே கொடுக்கவேண்டும், என்றும் தொல்காப்பியம் கூறுகிறது.
பேடி என்ற சொல் ஆண்பால் குறிக்கும் ஈறுகளுடன் வருவதற்கு இடமில்லை(495) என்று கூறுகிறது.
 
நன்னூல் பார்வையில்
“பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மைவிட்;டு அல்லாது அவாவுவ பெண்பால்
இருமையும் அக்றிணை அன்னாவும் ஆகும்”
என்றும் கூறுகிறது.
 
புறநானூற்றுப் பார்வையில்
 
“சிறப்புஇல் சிதடும், உறுப்புஇல் பிண்டமும்
கூனும், குறளும், ஊமும், செவிடும்
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் என”
கூறுகிறது.
 
திருக்குறளில்
“பகையகத்து பேடிகை ஒவ்வாள் அவையகத்து
அஞ்சும் அவன் கள்ள நூல்
(திருக்குறள்727)
 
போர்க்களத்தில் பேடியின் கையில் உள்ள கத்தி போல் சபை ஒடுக்கம் கொண்டவன் கற்ற கல்வி யாவும் சபையில் பயனற்றுப் போகும் என்கிறார் திருவள்ளுவர்.
 
நாலடியார் பார்வையில்
 
“செம்மையொன்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள் மரிஇ உம்மை
வலியால் பிறர்மனை மேல் சென்றாரே இம்மை
அலியாகி ஆடி உண்பர்”
நாலடியார்-85
முப்பிறப்பில் தமது வலிமையால் பிறர் மனைவியிடம் சென்றவரே ,இப்பிறப்பில் அலித்தன்மை கொண்டு பிறக்கின்றனர். இவ்வாறு பிறக்கின்றவர் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தெருக்களில் வாழ்கின்றவர்கள் என்று நாலடியார் அலிப்பிறப்பு குறித்துக் கூறுகிறது.
 
திருமந்திரத்தில்
 
“குழவியும் ஆணாம்வலத்து வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டக்கால் ஒக்கிலே”
திருமந்திரம்-446
சுவாச உயிர்ப்பு இருவரும் மருவுங்காலத்து வலமூக்கின் வழி வந்துகொண்டிருப்பதால் பிறக்கும் மகவு ஆண்.அது இடது மூக்கின் வழி வந்துகொண்டிருந்தால் பெண்ணாகும். இரண்டு மூக்கின் வழியாகவும் ஒத்துவருமானால் பிறப்பது அலியாகும்.
 
சிலப்பதிகாரம்-மணிமேகலை
 
“சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பேடிக்கூத்து எனச் சுட்டுகின்றன.
காமன் ஆடும் பேடாடலும் என்கிறது சிலப்பதிகாரம்(அரங்கேற்றும் காதை 22).
இது வாணாசுரன் நகரத்திலிருந்து தன் மகனாகிய அநிருத்தனனைச் சிறைநீக்க ஆண் திரிந்த பெண் கோலத்துடன் காமன் ஆடிய கூத்தைக் குறிப்பதாகும்.
 
சமஸ்கிருத புராண இலக்கியங்கள் கிரகராசிகளின் பலாபலனை அறியும் பொருட்டு புருஷநாள், பெண் நாள், அலிநாள் என்று வகைப்படுத்துகிறது.
ஆண் நட்சத்திரம், பெண் நட்சத்திரம், அலிநட்சத்திரம் (மிருகசீரிஷம், சதயம், மூலம்) என்று வகைமை செய்கிறது.
 
கொளடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் திருநங்கையர்களின் பணிகளை பிரித்துக் கூறுகிறது. அவையானவன, ஒற்று வேலை பார்த்தல், தன்நாட்டு மந்திரி உள்ளிட்ட அரச குடும்பங்கள், எதிரி நாட்டு அரச குடும்பங்களில் என்ன நிகழ்கிறது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து சொல்லும் ஒற்றர்களுக்கு பொருத்தமானவர்களாக குறிப்பிடப்படுகிறது
. மன்னரின் அரண்மனைகளிலும் உயர்வகுப்பினர்களின் வீடுகளிலும் பெண்களுக்கு அலங்காரம் செய்வது, நடவனமாடி மகிழ்விப்பது போன்ற பணிகளை செய்துள்ளனர். அரண்மனைக்குள்ளும், அந்தப்புரத்திற்குள்ளும் எந்த வித தடையின்றி எண்பது வயதைக்கடந்த ஆண்களும், ஐம்பது வயதைக்கடந்த பெண்களும், வயதுவரம்பற்ற திருநங்கைகளும் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைக்கொண்ட அரசன் தன்னை பாதுகாத்துக்கொள்ள திருநங்கைகளைப் பயன்படுத்தி உள்ளான். படுக்கையில் இருந்து எழும் அரசனுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதில் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு குப்பாயமும், தலைப்பாகையும் திருநங்கையர் பொறுப்பிலானது. இவ்வாறு வீரம், நம்பிக்கை, விசுவாசத்தின் அடிப்படையில்; நம்பிக்கைக்குரியவர்களாக திருநங்கைகள் இடம் பெற்றுள்ளனர்.
1569 ஆம் ஆண்டு நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் தக்காணத்தை ஆட்சி செய்த பூராஹன் நிஜாம் சிங்கிற்கும், அகமத்நகரை ஆட்சிசெய்த ராஜா இப்ராகிமுக்கும் இடையே போர் நடந்துள்ளது. அதில் திருநங்கைகள் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதே போல ராணி சாந்தாவின் அரண்மனையில் இரண்டு போர்பிரிவுகள் இருந்துள்ளன. இரண்டும் திருநங்கையரால் ஆனது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
முடியாட்சியின் துவக்க காலம் துவங்கி பதினேழாம் நூற்றாண்டுவரை அரசு அதிகார மையத்தில் திருநங்கையர் வகித்த பாத்திரம் எவ்வித வீழ்ச்சிகளையும் சந்திக்கவில்லை.
 
மதங்களில் திருநங்கைகள்
 
முஸ்லிம்கள்:
 
முஸ்லிம் பண்பாடும்-திருநங்கைகளின் சமூக வாழ்க்கையும்
பொதுவாக திருநங்கைகள் சமூகச் சடங்குகள் இந்து, முஸ்லிம் மதங்களின் கலவையாகவே உள்ளது. தமிழகத்தில் நடத்தப்படும் சடங்குகளில் இந்து மதத் தாக்கம் அதிகமாகவும், வட மாநில சடங்குகளில் முஸ்லிம்களின் மதத் தாக்கம் அதிகமாக உள்ளன. இதற்கு காரணம் வட இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்திருப்பதே காரணம்.
 
திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்து முடித்து 40 ம் நாள் செய்யப்படும் சடங்கின்போது பச்சை நிற உடைகளையே அணியவேண்டும் என்ற நியதியாக உள்ளது. அது போலவே பாலூற்றும் சடங்கின் இறுதியில் தாய்வீட்டு சீதனமாக அளிக்கப்படும் 5 தங்க குண்டுமணிகள் கோர்த்த இஸ்லாமிய சமூகத்தில் திருமணத்தின்போது அணிவிக்கப்படும் லச்சா போன்று உள்ளது.
திருநங்கைகளுக்கு என்று பொதுமொழியாக “கவுடி மொழி”உள்ளது. இம்மொழி உருது, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் கலவையாக உள்ளது. இம்மொழியில் பல உருது சொற்கள் கலந்து உள்ளது.
கானா-சாப்பாடு, ஜமாத்-மூத்த அரவாணிகள் குழு, ஜிந்தகி-வாழ்க்கை, பரிவார்-குடும்பம் என்பன.
பஞ்சாயத்து கூட்டம் நடைபெறும் இட ங்களில் அலிகள் கட்டாயமாக முக்காடு இட்டு இருக்கவேண்டும். இது முஸ்லிம் பெண்களின் பின்பற்றும் நடத்தையை நினைவு படுத்துகிறது.
ஜமாத் பிரச்சினையின்போது அல்லாகி கசம், மாத்தாகி கசம் என்று கூறுவார்கள். இந்து, இஸ்லாம் மதங்களை நினைவு படுத்துகிறது.
 
கிறிஸ்துவர்கள்:
 
பழங்கால இஸ்ரேயலர்களின் கடவுளுடைய தூய தன்மையையும் அவரை வழிபடுவதற்கான முறைகளையும், அவ்வழிபாட்டினை நிறைவேற்றும் குருக்களுக்கான நெறிமுறைகள் மற்றும் அவ்வினத்தார் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகளையும் லேவியர் நூல் நமக்கு அறியத்தருகிறது.
 
உடலில் குறைபாடுள்ள கூனன், குள்ளன், கண்ணில் ப+ விழுந்தவன், சொறி, சிரங்கு உடையவன் குருக்களாக வேண்டாம். திருநங்கைகள் குருவாக வேண்டாம்(லேவி 21:20) எனக் கூறப்பட்டிருக்கிறது
. திருநங்கையர் உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர் (தொ.நூ 39:1: திப 8:27). பழைய ஏற்பாட்டில் இஸ்ரலேயர்கள் அண்டை நாட்டு அரசவையில் திருநங்கையராகப் பயன்பட்டிருந்தனர் (தானி 1:3.8,9, எஸ் 1:10-15) பெர்சிய மற்றும் பாபிலோனிய அரசவையில் பல்வேறு காரணங்களுக்காக அதிகாரிகளாகத் திருநங்கைகள் இடம் பிடித்திருந்தனர்.
 
ஹிந்துக்கள்
 
வேதகாலத்தில்
வேதகாலத்தில் ஆண்பால், பெண்பால், மூன்றாம் பாலினர் என்று மூன்றாகப்பிரித்துள்ளது. ஆண்பாலை புருஷ் பிரக்ரிதி என்றும், பெண்பாலை ஸ்திரி பிரக்ரிதி என்றும் மூன்றாம் ;பாலினரை திரித்திய பிரக்ரிதி என்றும் கூறுகிறது. இவற்றிற்கான பதிவுகள் மனுஸ்மிரிதி, நாரக ஸ்மிரிதி, சம்ருத ஸ்மிரிதி, காமச+த்திரம் என்று பல நூல்களில் இடம் பெற்றுள்ளன.
இவர்களில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களைச் சமஸ்கிருத நூல்கள் சாண்டா, கலிபா, காமி எனப் பல வகையாகப் பிரித்துக் கூறுகின்றன. இவர்களைப் பற்றி சப்த கல்ப த்ருமா என்று சமஸ்கிருத அகராதியிலும், வாசஸ்பதி எழுதிய ஸ்மிருதி ரத்னாவளி என்ற நூலிலும், காமசாத்திரத்திலும் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. ஆண் விதையும், பெண்விதையும் சமமாக இருக்கும்போது மூன்றாம் பாலினமாக நபுசகம் உருவாகிறது.
 
வேதகால சமூகத்தில் இலக்கியத்தில் ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்போது திருநங்கைகள் நடனமாடிக் கிருஷ்ணனை வரவேற்றுள்ளனர். மேலும் துவாரகையில் கிருஷ்ணரை அரவாணிகள் வரவேற்றதாலேயே அவர்களுக்கு தெய்வ சக்தி உண்டு என்ற நம்பி இன்றளவும் வடநாட்டில் உள்ளது.
 
வரலாற்று தொடர்புகள்
 
தமிழ்நாடிட்டில் நடைபெறும் கூத்தாண்டர் திருவிழா இதற்கு சான்றாகும்.
மகாபாரதக் கதை---
மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர், )அரவாண் அர்ஜுனனின் மகன். போரில் வெற்றி பெறுவதற்காக அரவாணை பலி கொடுக்க பாண்டவர்கள் முடிவு செய்கிறார்கள். அரவாணும் இதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறான் ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறான். தான் இறப்பதற்கு முன், திருமணம் செய்ய வேண்டும் என்பதே. நாளை இறக்கப்போகும் ஒருவனை மணந்து அடுத்த நாள் விதவைக்கோலம் பூண எந்தப் பெண்ணும் முன் வர மறுக்கிறாள். இதைப் பார்க்கும் கிருஷ்ண பகவான் பேரழகியாக மோகினி அவதாரம் எடுத்து அரவாணை மணந்து, தாம்பத்திய உறவு கொண்டு மறுநாள் விதவையாகிறார். அந்தக் கிருஷ்ண வடிவம் தான் திருநங்கைகள்! அதனை நினைவுகூறும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் இந்த கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது. அரவாண் களப்பலியும், திருநங்கைகள் திருமணமும், விதவை கோலம் பூணுவதும் நிகழ்கிறது.
மணப்பெண் அலங்காரம் செய்துகொண்டு அரவானுக்காக தாலி கட்டிக் கொள்ளும் வைபவமும் நடைபெறம். அரவாணை கணவராக ஏற்று திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்வார்கள். பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள் புதுமணப்பெண்ணைப் போல அலங்காரம் செய்து கொண்டு அழகாய் வலம் வருவார்கள்.
சித்திரை தேரோட்டமும், அன்றே அரவானுக்காக திருநங்கைகள் விதவைக் கோலம் பூண்டு கதறி அழும் வைபவமும் நடைபெறும். அன்றுடன் திருநங்கைகள் சொந்த ஊர் திரும்புவர். குழந்தை பேறு கிடைக்கும் அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. உறுமைசோறு (பலிசாதம்) படையலில் படைக்கப்படும் பலகாரங்களையும், உணவையும் வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.
கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், கொரட்டூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் நேற்று முதல் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவர்.
 
 
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்கு என்று விழா நடைபெறும். 18 நாட்களும் தினம் தினம் ஒரு நிகழ்ச்சி என கூவாகம் கிராமமே களைகட்டும்
 
இதையொட்டி கூவாகத்தில் அரவாணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் கூடி விழா கொண்டாடுவது வழக்கம்.
சித்ரா பவுர்ணமி தினத்தன்று அரவாணிகளுக்கு தாலி கட்டும் வைபவம் விமர்சையாக நடைபெறும்.. கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா களை கட்டும்.
ஆயிரக்கணக்கான அரவாணிகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கூவாகத்தில் குவிவர்கள். அரவாணிகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
மறுநாள் காலை அரவான் களப்பலி கொடுக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து அரவாணிகள் அனைவரும் விதவைக் கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுவார்கள். அத்துடன் சித்திரைத் திருவிழா முடிவுறும்.
அரவாண் திருமணமும் திருநங்கைகள் விதவைக் கோலமும் ராஜகுமாரன் என்று அழைக்கப்படுகிறது.
மும்பை, சென்னை, டில்லி, கல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து திருநங்கைகள் வருகிறார்கள்.
இக்கால கட்டத்தில் மட்டுமே நாம் அவர்களிடம் வேற்றுமை காட்டுகிறோம், ஆனால் வரலாறு காலம் அவர்களை தங்களுக்குள் ஒருவராகவே பார்த்துள்ளது என்பதே உண்மை.
---க.ய.ஆனந்தியமுனைதுறைவன்
 
== முற்பதிவு==