ஊதாரி மைந்தன் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 19:
* ஆயிரம் நல்லவர்கள் நல்வழியில் வாழ்வதை பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரே கெட்டமனிதனால் இறைவன் மிகுந்த இன்பம் அடைவார்.
* எவ்வளவு பாவம் செய்து நாம் தவறிப்போனாலும். நாம் பாவங்களை உணர்ந்து இறைவனிடம் திரும்பும் போது அவர் நம்மை மன்னித்து ஏற்கிறார்.
* உவமையில் தந்தையாக வருபவர் இறைவன். யூதர்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட திருச்சட்டங்களும் இறைவாக்குகளும் தந்தையின் சொத்து. யூதர்களில் வரி வசூலிக்கும் ஆயக்காரர்களே இளைய மகன். ஆயக்காரர்கள் திருச்சட்டத்தின்படி நடவாமல் பண ஆசை உள்ளவர்களாக வாழ்ந்து தந்தையின் சொத்தைக் கடைப்பிடிக்காமல் பாழாக்கினார்கள். பிற இனத்தாராகிய உரோமருக்கு கூலியாள்களாக வேலைசெய்து, மிகுதியாக வரி வசூலித்தார்கள். பன்றியின் உணவாகிய லஞ்சப் பணத்திற்கு ஆசைப்பட்டார்கள். எனவே மக்களால் பாவிகள் என்று ஒதுக்கப்பட்டார்கள்.
இளைய மகனின் மன மாற்றத்திற்குத் தந்தையின் வேலையாள்களே காரணமாக இருந்தார்கள். அவ்வாறே ஆயக்காரர்கள் மனந்திரும்புவதற்கு இயேசுவின் சீடர்களே காரணம். அவர்களிடம் செல்வம் இல்லாவிட்டாலும் விண்ணரசின் மகிழ்ச்சி இருந்தது. இதைக் கண்ட ஆயக்காரர்கள் மனம் மாறினார்கள். தந்தையைத் தேடித் திரும்பி வந்தார்கள்.
தந்தையாகிய இறைவன் விண்ணகத்திலிருந்து இயேசுவாக இறங்கி வந்தார். மனம் மாறிய வரிதண்டுவோருடைய பழைய ஆடையாகிய பாவங்கள் மன்னிக்கப்பட்டு புதிய ஆடையாகிய தூய ஆவி அணிவிக்கப்பட்டது. கொழுத்த கன்றை அடித்த விருந்து என்பது இயேசுவின் மரணத்தால் அருளப்படும் பாவமன்னிப்பாகும். இயேசு மனம் மாறிய ஆயக்காரர்களுடன் விண்ணரசின் விருந்தில் கலந்துகொண்டார்.
பரிசேயரும் வேதபாரகருமே தந்தையின் மூத்த மகன். அவர்கள் தம்மை நேர்மையாளர் என்றும் திருச்சட்டத்தைக் கைக்கொள்பவர் என்றும் எண்ணித் தற்பெருமையுடன் வாழ்ந்தார்கள். பாவிகளாகிய ஆயக்காரருடன் தந்தையாகிய இயேசு விருந்துண்பது திருச்சட்டத்தின்படி தவறு என்று வாதிட்டார்கள். விண்ணரசின் விருந்து தங்களுக்கே உரியது என்று அறிவித்தார்கள். ஆனால், வெளிவேடக்காரராக வாழ்வதை அவர்கள் அறியவில்லை. இயேசு அவர்களையும் மனம்மாறி விண்ணரசின் விருந்தில் கலந்துகொள்ள அழைத்தார். இந்த உவமையை அதற்காகவே அவர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் பாவங்களை அறியவில்லை. தற்பெருமையால் விண்ணரசை இழந்தார்கள். நாமும் வெளிவேடக்கார பரிசேயரைப்போல் வாழாமல், பாவத்தை அறிந்து தாழ்மையுடன் மனம்மாறிய ஆயக்காரரைப்போல் இயேசுவின் மன்னிப்பைப் பெறவேண்டும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஊதாரி_மைந்தன்_உவமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது