முலான் (2020 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2020 ஆண்டைய ஆங்கிலத் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Mulan (2020 film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:44, 2 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

முலான் என்பது 2020 ஆம் ஆண்டய அமெரிக்க அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், லாரன் ஹைனெக் மற்றும் எலிசபெத் மார்ட்டின் ஆகியோர் திரைக்கதை அமைக்க, நிகி காரோ இயக்கத்தில் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்தது. இந்த திரைப்படம் சீன நாட்டுப்புறக் கதையான "தி பேலட் ஆஃப் முலான் " ஐ அடிப்படையாகக் கொண்டது. மேலும் 1998 ஆம் ஆண்டில் டிஸ்னி நிறுவனம் இதேபெயரில் தயாரித்த அனிமேஷன் படத்தைத் தழுவி லைவ் ஆகசனில் தயாரித்தள்ளது. இந்த படத்தில் முதனமை வேடத்தில் லியு நடக்க இஃபெய், டோனி யென், ஜேசன் ஸ்காட் லீ, யோசன் ஆன், காங் லீ, மற்றும் ஜெட் லீ ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

லைவ்-ஆக்சன் முலான் படத்தின் மறு ஆக்க திட்டமானது 2010 இல் தொடங்கியது, ஆனால் இது அப்போது நிறைவேறவில்லை. 2015 மார்ச்சில், இதற்கான தயாரிப்பு முயற்சி அறிவிக்கப்பட்டு, படத்தை இயக்க காரோ 2017 பிப்ரவரியில் பணியமர்த்தப்பட்டார். படத்தின் நாயகி வேடத்தில் நடிக்க ஆயிரத்துக்கும் மேறபட்ட சீன யுவதிகளைப் பரிசீலித்து, 2017 நவம்பரில் லியூ இஃபெய் என்பவர் தேர்வானார். மீதமுள்ள நடிகர்கள் அடுத்த ஆண்டில் தேர்வு செய்யப்பட்டனர். படப்பிடிப்பானது 2018 ஆகத்தில் தொடங்கி நவம்பர் வரை நீடித்தது, படப்பிடப்பானது நியூசிலாந்து மற்றும் சீனாவில் நடைபெற்றது .

எம்பி.ஏ.ஏ ஆல் பி.ஜி -13 மதிப்பீடு வழங்கப்பட்ட டிஸ்னியின் முதல் லைவ்-ஆக்சன் மறு ஆக்கப் படமாக முலன் உள்ளது. ஆகும். [1] இப்படமானது 2020 மார்ச் 27 அன்று அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் 2019–20 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வெளியீடு தாமதமானது. புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப்படுகிறது.

அனுமானம்

குறிப்புகள்

  1. Rico, Klaritza (2020-02-19). "'Mulan' Is Disney's First Live-Action Remake to Get a PG-13 Rating". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முலான்_(2020_திரைப்படம்)&oldid=2944084" இலிருந்து மீள்விக்கப்பட்டது